பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

267


முக்கிய ஆக்டர்கள் மாத்திரம் நன்றாய் நடிப்பார்கள்; மற்ற ஆக்டர்களெல்லாம் ஒரு மாதிரியாயிருக்கும்; அப்படியல்லாது அயன் (Chief) பாத்திரங்கள் முதல் கடைசி ஆக்டர்கள் வரையில் எல்லோரும் நன்றாய் நடித்தால்தான் நாடகம் நன்றாய்ச் சோபிக்கும் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனித்து, ஒருக்கால் தாங்கள் ஏதாவது சிறிய வேடங்களும் பூண வேண்டி வரினும், அவைகளிலும் ஜாக்கிரதையாக நடிப்பார்களாக. ஒரு சித்திரம் வரைபவன், ஒரு படத்தில் முக்கியமான உருவங்களை மாத்திரம் சரியாக வர்ணித்து, பக்கத்திலிருக்கும் மற்ற உருவங்களைச் சரியாக வர்ணிக்காவிட்டால் சித்திரம் மொத்தத்தில் அழகாயிருக்குமோ?


நான் இந் நாடகத்தில் அமரசிம்மனாக நடித்தேன். அவ்வாறு நடித்ததில் ஒரு சமாச்சாரம் இன்னும் எனக்கு முக்கியமாக நினைவிலிருக்கிறது. இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் சாரளனுடன் அமரசிம்மன் குஸ்தி பிடிக்க வேண்டியிருக்கிறது; இக் காட்சி நடந்த பிறகு, எனது சில நண்பர்கள் மேடைக்குள் வந்து, “சம்பந்தம்! குஸ்தி பிடிக்க எப்பொழுது கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டார்கள். என் சிறு பிராயத்தில், எனக்கும் என் அண்ணன்மார்களுக்கும் தேகப்பயிற்சிக்காக, எங்கள் தந்தை நன்னு மியாசாயபு என்கிற ஒரு மகம்மதிய வஸ்தாதைக் கொண்டு (வஸ்தாத் என்றால் உபாத்தியாயர் எனப் பொருள்படும்), தண்டால், பஸ்கி முதலியவைகளையும், கோல் வித்தை செய்யவும், குஸ்தி பிடிக்கவும் கற்பித்திருந்தார். அப்பொழுது எனக்கு மிகவும் சிறுவயதாயிருந்த போதிலும், என் அண்ணன்மார்களுடன் நானும் இவைகளை யெல்லாம் கற்று வந்தேன். அன்றியும் 1881ஆம் வருஷம் முதல் 1887 வரையில் பீபில்ஸ் பார்க்கில் நடந்த பார்க் பேர் (Park Fair) வேடிக்கைக்கு என் தகப்பனார் ஒரு காரியதரிசியாயிருந்தார்; அவருடன் இந்த வேடிக்கையில் குஸ்தி நடக்கும்தோறும், நான் போய்ப் பயில்வான்கள் குஸ்தி பிடிப்பதைக் கவனித்து வந்தேன். இதனால் குஸ்தி பிடிப்பதன் சூட்சுமங்களையெல்லாம் நன்றாயறிந்தவனானேன். இவ்வாறு நான் சிறுவயதில் கற்ற சிலம்ப வித்தையானது, எனக்கு 20 வருடத்திற்கப்புறம் பிரயோஜனப்பட்டது! இதை இங்கு நான் கூற வந்த காரணம் என்னவென்றால், நாடக மேடைமீது ஆட விரும்பும் ஒருவனுக்கு, எந்த வித்தையும் ஏதாவது ஒரு சமயம் பிரயோஜனப்படாமற் போகாதென்பதேயாம். “களவுங்கற்று