பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

நாடக மேடை நினைவுகள்


மற என்னும் ஔவையின் வாக்கியம் ஆக்டர்களுக்கு மிகவும் உபயோகப்படும்.


இந் நாடகத்தை விட்டு அகலுமுன், இதை அன்று ஆடிய பொழுது, நான் புதிதாய் அறிந்த ஒன்று இங்கெடுத்தெழுதுகிறேன். இந்நாடகத்தில் ஐந்தாம் அங்கம் இரண்டாவது காட்சியில், ராஜீவாட்சி காதலைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறி வரும்போது மற்றவர்களெல்லாம் ஒவ்வொருவராக, “நானும் அப்படித் தானிருக்கிறேன்! நானும் அப்படித்தான் இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். இந்தக் காட்சியை நான் மொழி பெயர்த்த பொழுது, “இக்காட்சியில் என்ன இருக்கிறது? இதையொரு காட்சியாக ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதினாரே!” என்று எண்ணினேன். பிறகு அன்றிரவு நாடக மேடையின்பேரில் அக்காட்சி ஆடப்பட்ட பொழுது, சபையோரெல்லாம் அதைப் பார்த்து சந்தோஷித்த பிறகே, அக் காட்சியின் அழகும் மகிமையும் தெரிந்தது. இந்த நாடகம் பன்முறை ஆடப்பட்ட பொழுதெல்லாம், இக் காட்சியானது ஜனங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடாமற் போனதில்லை. இதனால் நான் அறிந்தது, ஒரு நாடகத்தின் அழகும் பெருமையும் அதைப் படிக்கும்பொழுது முற்றிலும் தெரியாது; அதை மொழி பெயர்க்கும் போதுகூடத் தெரியாது; மேடையின்மீது அதை நடிக்கும்போதுதான் தெரியும், என்பதே.


இந் நாடகமானது எங்கள் சபையில் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு ஜீவதிசையிலிருந்தபொழுது பன்முறை ஆடப்பட்ட போதிலும் அதற்கப்புறம் ஆடப்படவில்லை; அன்றியும் இதர சபைகளால் சில தடவைகளில்தான் ஆடப்பட்டது. இந்நாடகத்தின் ஒரு முக்கிய அம்சம் என்ன வென்றால், இது விக்டோரியா பப்ளிக் ஹால் முதலிய நாடகக் கட்டடங்களில் ஆடுவதைவிட, தோட்டங்களில் ஆடுவது மிகவும் சிலாக்கியமாம்; அவ்வாறு ஒரு முறை இதை நாங்கள் மயிலாப்பூர்கிளப்பின் தோட்டத்தில் ஆடியதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்.


இவ்வருஷம் எங்கள் சபையில் இன்னொன்று புதிதாய் ஆரம்பித்தோம். அதாவது பான்சி டிரஸ் என்டர்டெயின் மென்ட்! (Fancy Dress Entertainment). இதற்குச் சரியாகத் தமிழ் மொழி பெயர்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை; ஒரு விதத்தில் “ஒவ்வொருவரும் மனம்போல வேஷம் தரித்து