பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

269


வேடிக்கையாய்க்காலம் கழிப்பது” என்று இதன் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.


இதை நான் ஆரம்பித்ததற்குக் காரணம், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரே. நாங்கள் இருவரும் ஒருநாள் எங்கள் வழக்கம் போல் சபையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது “என்ன சம்பந்தம்! ‘ஜஷ்டை’ சும்மா இருக்கின்றாயே! ஏதாவது புதியதாய்ப் பண்ணு!” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லி, இதைப்பற்றி எடுத்துப் பேசினேன். ‘மிகவும் நல்லது!’ என்று ஒப்புக்கொண்டார்.


இதற்குச் சில தினங்களுக்கு முன், நான் சேர்ந்திருந்த மதுபான விலக்குச் சங்கம் ஒன்றிற்கு இருப்பிடம் ஏற்படுத்த வேண்டுமென்றும், ஏதாவது நாடகம் போட்டுக் கொஞ்சம் பணம் உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். இதை இரண்டையும் சேர்த்து ஒன்றாய் முடிக்கலாமெனத் தீர்மானித்து ஏற்பாடு செய்தேன்.


இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது. ஏறக்குறைய 50 பெயர்களுக்குமேல் வேஷம் தரித்து வந்தனர்; சபையின் அங்கத்தினர் அல்லாதவர்களும் சிலர் வேடத்தில் வந்தனர். இரவு 9 மணிக்கு ஆரம்பித்துச்சுமார் 12 மணிவரையில் நடந்தது; மேடையின்மீது கொஞ்சம் சங்கீதமும், தோற்றக் காட்சிகளும் நடந்தன. தென் இந்தியாவில் இதுதான் இந்தியர்களுக்குள் முதல் முதல் இம்மாதிரியான கூட்டம் கூடியது. சாதாரணமாக ஆங்கிலேயர்களுக்குள் இவ்வழக்கம் உண்டு. அவர்கள் பால் (Ball) ஆட்டத்துடன் இதை வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பிறகு இம்மாதிரியான கூட்டங்கள் இரண்டொரு முறை நடந்த போதிலும் பிறகு இது விடப்பட்டது. எங்கள் சபையானது மறுபடியும் உத்தாரணம் செய்ய வேண்டிய விநோதங்களில் இது ஒன்றாகும்.


இந்த 1902ஆம் வருஷம், அவ்வருஷத்தில் காரியதரிசிகளில் ஒருவராகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எங்கள் சபையின் வருஷாந்திர அறிக்கையில் தெரிவித்தபடி, எங்கள் சபையின் சரிதையில், ஒரு முக்கியமான வருஷமாம். இவ்வருஷம் எங்கள் சபையானது பால்ய பருவம் நீங்கி யௌவனதிசையை அடைந்தது என்றே கூற வேண்டும். இது முதல் பல வருஷங்களாக ஈஸ்வரகிருபையால் அபிவிருத்தி