பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மேடை நினைவுகள்

270


அடைந்து கொண்டே வந்ததெனக் கூறுதல் மிகையாகாது. இவ்வருஷம் முதல் எங்கள் சபையின் அங்கத்தினரின் தொகையும், நடத்திய நாடகங்களின் தொகையும், சபைக்குப் பண வசூலும் அதிகரித்துக்கொண்டே வந்தது யாவரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கியக் காரணம் சபைக்குக் காரியதரிசிகளாகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனது தமயனார் ஆறுமுக முதலியாரும் எடுத்துக்கொண்ட இடைவிடா ஊக்கமே என்று நம்புகிறேன்.


1902ஆம் வருஷத்தில் நான் இன்னொரு தமிழ் நாடகம் எழுதினேன்; அதாவது “காதலர் கண்கள்” என்பதாம். ஆங்கிலத்தில் “தி ஐ ஆப் லவ் The Eye of Love என்று இதன் பெயர். இப்பெயர் கொண்ட ஒரு சிறு நாடகம், முதலில் ஜர்மன் பாஷையில் எழுதப்பட்டதாம்; அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை மியூசியம் (Museum) புஸ்தகசாலையில் நான் ஒரு முறை 1895ஆம் வருஷம் படித்தது ஞாபகமிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்பே குறித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு, சென்னை டிராமாடிக் சொசைடி (The Madas Dramatic Society) யாரால் ஆடப்பட்ட பொழுது நான் பார்த்தேன். இது இவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஆடிய ஒரு சிறு நாடகமாயிருந்த போதிலும், மிகவும் நன்றாயிருந்ததென என் மனத்திலும்பட்டது. இதைத் தமிழில் நாம் பெருக்கி மூன்று மணி நேரம் ஆடக்கூடிய நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன்; ஆயினும் அத் தீர்மானத்தை நிறைவேற்ற அநேகக் காரணங்களால் இதுவரையில் முடியாமற் போயிற்று. இவ்வருஷம், சென்ற வருஷம் போல், சபை தினக் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புது நாடகம் போடவேண்டுமென்று எனது நண்பர்கள் வற்புறுத்த, இதைத் தமிழில் “காதலர் கண்கள்” என்று பெயரிட்டு விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகத்தின் கதை, இதை வாசிக்கும் அநேகருக்குத் தெரிந்திருக்குமென நம்புகிறேன்; ஆகவே அதைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; ராஜகுமாரனும், ராஜகுமாரியும் ஒருவரை யொருவர் ஏமாற்ற, வேலைக்காரனாகவும், வேலைக்காரியாகவும் வேடம் பூண்டது, அந்த ஜர்மன்கதையினின்றும் எடுக்கப்பட்டது. இந் நாடகம் ஆடும் பொழுதெல்லாம் பெரும் நகைப்பை விளைவிக்கும் கத்திச் சண்டைக் காட்சியின் அபிப்பிராயம். ஷெரிடன் (Sherden) என்பவர் ஆங்கிலத்தில் “தி ரைவ்ல்ஸ்”