பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

271


(The Rivals) என்று எழுதிய நாகடத்தினின்றும் எடுக்கப்பட்டது; மற்றக் கதையெல்லாம் என் சொந்த மனோபாவத்தைக் கொண்டு எழுதியது. இந்நாடகத்தில் மஹமதுஷா ஜுல்பிகர்கான் முதலிய சில பாத்திரங்கள் வருகின்றன. அவர்கள் ஹிந்துஸ்தானி பதங்களை உபயோகித்து கொச்சைச் தமிழுடன் பேச வேண்டியதற்கு, நான் 1898ஆம் வருஷம் வக்கீலான பிறகு, என் கட்சிக்காரர்களுடன் பேசுவதற்காக ஒரு மகமதிய உபாத்தியாயரை வைத்துக் கற்றுக் கொண்ட, ஹிந்துஸ்தானி மிகவும் உபயோகப்பட்டது. அன்றியும் கொல்ஹாபூர் சமஸ்தானத்தில் பழகிய சுதர்சனாசாரி என்பவர், ஹிந்துஸ்தானி நன்றாய்க் கற்றவர். நான் எழுதிய சில வாக்கியங்ளைத் திருத்திக் கொடுத்தார். நான் நாடகத்தை எழுதும்பொழுது, இவ்வாறு திருத்திக் கொடுக்கவே, அந்த ஹிந்துஸ்தானி வார்த்தைகளைச் சரியாகப் பேசவேறு ஆக்டர்கள் ஒருவரும் கிடைக்காதவனாய், அவரையே ஜுல்பிகர்கான் வேஷம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அதுவரையில் மேடையின்பேரில் ஏறினவரல்ல. ஆகவே தனக்கு வெட்கமாயிருக்கிறதென்று முதலில் மறுத்தார். பிறகு என் பலாத்காரத்தின்பேரில் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். பிறகு ஒத்திகைகள் நடக்கும் பொழுதெல்லாம் “நீ படித்து விடு, நீ படித்து விடு” என்று தான் தப்பித்துக்கொண்டு, என்னையே ஆக்டு செய்யும்படி கேட்டுக் கொண்டு வந்தார். ஆயினும் ஒரு முறை உங்களுக்குக் கொடுத்த பாகத்தை மாற்றப் போகிறதில்லையென்று கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை வழிக்குக் கொண்டு வந்தேன்.


நாடக ஆரம்பத்திற்கு முன்கூட, “சம்பந்தம், எனக்கு பயமாயிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “அதெல்லாம் உதவாது; நீங்கள் எப்படியும் இந்தப் பாத்திரத்தை மிகவும் நன்றாய் நடிப்பீர்கள். எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமில்லை” என்று உற்சாகப்படுத்தி, “மேடைக்குப் போன பிறகு ஹாலில் வந்திருப்பவர்களைக் கவனியாதீர். உங்கள் பாகத்தின்மீதே கண்ணும் கருத்துமாய் இரும்” என்று சொல்லி அனுப்பினேன். அவரும் அவ்வாறே செய்து அந்தப் பாகத்தை மிகவும் நன்றாக நடித்தார். இந்த ஜுல்பிகர்கான் பாகத்தைப் பிறகு அநேகர் நடிக்கப் பார்த்திருக்கிறேன்; நானும் இரண்டொருமுறை நடித்திருக்கிறேன். இருந்தாலும், அது வரையிலும் நாடக மேடை யென்பது இன்னதென்றறியாத அந்த சுதர்சனாச் சாரி, அன்று