பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

273


ஹைதராபாதிற்குப் போய்விட்டார்; அவர் பிறகு என்னவாயினாரோ அறிகிலேன். (அவர் வெடிகுண்டினால் கொலையுண்டதாக ஒரு வதந்தியிருந்தது.) அவர் கடைசிவரையில், ‘என்னை நீ அடிக்கடி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திரா விட்டால், நான் அன்று மேடையை விட்டு ஓடிப்போயிருப்பேன்’ என்று பன்முறை கூறியது இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது.


இந் நாடகத்தில் வரும் இரண்டு ஸ்திரீ வேஷங்களாகிய தாராபாய், துளசிபாய் முறையே சி. ரங்கவடிவேலு, பத்மநாபராவ் இவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. பத்மநாபராவ் இதுதான் முதல் முதல் அரங்கத்தில் ஸ்திரீவேஷம் தரித்து ஆக்டு செய்தது. இருந்தபோதிலும் துளசிபாயின் பாகத்தை மிகவும் நன்றாய் நடித்தார்.


ஆண் வேடங்களில், அவருக்கென்றே எழுதப்பட்ட மதால்சிங் பாத்திரத்தை என் நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் மிகவும் நன்றாய் நடித்தார். அந்தப் பாத்திரத்திற்குப் பெயரும், மத்தளத்தைப்போல் “மெல்லிய” உடம்பை உடையவராயிருந்தபடியால் மதால்சிங் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாத்திரம் மதன்சிங் என்னும் தத்துவாயனே; அதை அ. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் வெகு விந்தையாய் நடித்தது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தத்துவாயனைப் போல் மேடையில் நடிப்பது எளிதல்ல. அதில் முக்கியமான கஷ்டமென்ன வென்றால், அளவுக்கு மிஞ்சித் தத்தினாலும் ஆபாசமாகும்; அளவுக்குக் குறைந்தாலும் சோபிக்காது. சரியாக எவ்வளவு இருக்கவேண்டுமோ சுபாவப்படி, அதன்படி தத்துதல் கடினமாம். நான் இதே நாடகத்தை மற்றவர்கள் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் எல்லோரும், அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தத்துகிறார்களே யொழிய, நாராயணசாமிப் பிள்ளையைப் போல் சுபாவத்திற்கிசைய தத்துவதைக் கண்டேனில்லை. தத்திப் பேசுவது சபையோர்க்கு நகைப்பை உண்டு பண்ணுகிறதேயென்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிகமாகத் தத்தினால், ரசாபாசமாகிறது. இதை இப்பாத்திரத்தை நடிக்க விரும்புவோர் கவனிப்பார்களாக. காலஞ்சென்ற பிட்டாபுரம் ஜமீன்தார் (தற்காலத்திய ஜமீன்தாருடைய தந்தையென நினைக்கிறேன்), இந்நாடகத்தின்மீது மிகவும்