பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

நாடக மேடை நினைவுகள்


பிரீதியுடையவராயிருந்தார். தன் தேக அசௌக்கியத்தையும் பாராது இதை நாங்கள் ஆடும்பொழுது தெல்லாம், வந்து பார்த்து வந்தார். வேறு நாடகங்கள் நாங்கள் ஆடும்பொழுது வந்தால், இந்நாடகத்தை மறுமுறை எப்பொழுது ஆடப் போகிறீர்கள் என்று பன்முறை கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது.


இந் நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது 180 முறைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதை நாடகாபிமானிகள் விரும்பும் ஒரு நாடகமெனவே நான் கூற வேண்டும். நகைப்பைத் தரும்படியான நாடகத்தை ஆட வேண்டும் என்று விரும்பும் சபைகள் இதை எடுத்துக் கொள்ளலாம்.


பதினாறாம் அத்தியாயம்


1903ஆம் வருஷத்தின் முன் பாகத்தில் “பேயலல பெண்மணியே” என்னும் நாடகத்தையும், பிற்பாதியில் “வாணீபுர வணிகன்” என்பதையும் எழுதி முடித்தேன்.


இப் “பேயல்ல பெண்மணியே” எனும் நாடகத்தின் கதையானது, “லா சோம்நாம்புலா” எனும் இத்தாலிய நாடகத்தின் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பினின்றும் எடுக்கப்பட்டது. இந்நாடகம் அவ்வளவு பிரபலமானதல்லவாதலால், இதன் கதையின் முக்கியாம்சத்தை இங்கெழுத விரும்புகிறேன். “சோம்நாம்புலிசம்” என்பது ஒரு நரம்பைச் சார்ந்த வியாதி. இதைத் தமிழில் தூக்கத்தில் எழுந்து உலாவும் வியாதி என்று சொல்லலாம். இக்கதையில் கதாநாயகி இவ் வியாதியால் பீடிக்கப்பட்டவளாய்த் தூக்கத்தில் தானறியாதபடி நடந்து சென்று, ஓர் அரசனுடைய படுக்கையறைக்குப் போகிறாள். இந்த உண்மையறியாது அவள் காதலன் அவளைத் துர்நடத்தையுடையவள் என்று வெறுக்கிறான்; பிறகு முடிவில் உண்மை வெளியாக, அவன் சந்தேகம் நிவர்த்தியாகி, அவளை மணக்கிறான். இந்த வியாதிக்குத் தமிழில் பெயர் கிடையாது; சாதாரணமாக இவ்வாறு யாராவது நடந்தால் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆகவே இந்நாடகத்திற்குப்