பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

நாடக மேடை நினைவுகள்


பிறகு என்னைத் தற்காலத்திய ஜன சமூக நாடகங்கள் (Present day Social Drama) எழுதும்படி உந்தியது.


இந்நாடகத்தில் கதாநாயகியின் பாகம் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு எடுத்துக் கொண்டார். இது இவர் ஆடிய வேடங்களிலெல்லாம் ஒரு கஷ்டமானது என்றே கூற வேண்டும். நித்திரையில் எழுந்து நடப்பவர் போல் நடிக்கும் பொழுது, கண்கள் திறந்து கொண்டேயிருக்க வேண்டும்; ஆயினும் அவைகளில் பார்க்கும் சத்தியில்லாதது போல் காட்ட வேண்டும்; நான் இம்மாதிரியான வியாதி பிடித்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழியப் பார்த்ததில்லை. ஆகவே இன்னது செய்வதென்று தோன்றாதவனாய், இவ்வியாதியைப் பற்றி ஆங்கில வைத்தியப் புஸ்தகங்களில் எழுதியிருப்பதை யெல்லாம் சற்றேறக்குறைய வாசித்து, ஒருவாறு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்து, அவருக்குக் கற்பித்தேன். இந் நாடகத்தில் அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலர் புகழ்ந்ததே அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்குச் சரியான சன்மானமாகும் என எண்ணுகிறேன். அ. கிருஷ்ணசாமி ஐயர் பங்கஜாட்சியாக நடித்தார். எஸ் ராஜகணபதி முதலியார், ஹாஸ்ய பாகமாகிய சோமநாதன் வேடம் பூண்டார். ஆயினும் ரங்கவடிவேலு நடித்த கஷ்டமான பாகத்தையும், கிருஷ்ணசாமி ஐயரின் திவ்யமான சங்கீதத்தையும், ராஜ கணபதியின் ஹாஸ்யத்தையும் விட, இந்நாடகத்தில், வந்திருந்தவர்களுக்கு மிகுந்த ஆரவாரமான சங்தோஷத்தை உண்டுபண்ணியது தெருக் கூத்தாடிகளாக வந்த ஆக்டர்களே! இதற்கு ஒரு காரணம், சாதாரணமாக கிராமாந்தரங்களில் ஆடும் தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களையெல்லாம் திரட்டி இதில் எழுதியதாயிருக்கலாம். இருந்தாலும் அதற்குத் தக்கபடி நடித்த ஆக்டர்களுடைய விமரிசையில்லாவிட்டால் இது அவ்வளவு சோபித்திராது என்பது என் துணிபு. இத் தெருக் கூத்தாடிக்களுக்குப் பெயர் வைத்தபொழுது நடித்த ஆக்டர்களின் பெயரையே சுருக்கி வைத்தேன். நாராயணன், ரெங்கன், குப்பன், சாமன், கோபாலன் என்ற பெயர்களை அப்பெயர் கொண்டவர் களுடைய அனுமதியைப் பெற்றே எழுதி வைத்தேன்; இது அவர்களுக்கும் நகைப்பாயிருந்தது; வந்து நாடகம் பார்த்தவர்களுக்கும் நகைப்பாயிருந்தது. இவர்களுக்குள் நாராயண சாமிப்பிள்ளை, தெருக்கூத்தாடி நாராயணனாக நடித்தது