பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

நாடக மேடை நினைவுகள்


இந்த நீலகேசி எனும் பெயர் வைத்ததில் எனக்கு ஒரு சிறு சந்தோஷம். நாடகத்தை நான் எழுதியபொழுது ஆங்கிலத்தில் ‘நெரீசா’ என்று பெயர் இருக்க, என் மாமூல்படி அப்பெயரை ஒட்டி நீலகேசி என்று பெயரிட்டேன். பிறகு கொஞ்சநாள் பொறுத்து, நாடக மேடையில் இதை ஆட வேண்டி, இந் நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் என்னென்ன ஆராய்ச்சிகளும், சர்ச்சைகளும் இருக்கின்றன என்று அங்ஙனம் படித்துக் கொண்டு வரும்பொழுது, “நெரீசா” என்னும் பதத்திற்கு நீலவர்ணமுடைய தலைமயிரை உடையவள் என்று அர்த்தம் கண்டேன். இந்த உண்மையை அறியாமலே, அப்பெயரை ‘நீலகேசி’ என்று அமைத்ததற்காகக் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.


இந்நாடகம் பிறகு எங்கள் சபையில் ஐந்தாறு முறைதான் ஆடப்பட்டது. எம். சுந்தரேச ஐயருக்குப் பிற்காலம் டாக்டர் டி. ஸ்ரீனிவாசராகவாச்சாரியார், ஷாம்லால் வேடத்தில் மிகவும் நல்ல பெயர் பெற்றனர். இந்த நாடகமானது இதர சபைகளால் அதிகமாக ஆடப்படவில்லை. என் குறிப்பின்படி இதுவரையில் என் அனுமதியின் மீது 18 தரம்தான் ஆடப்பட்டிருக்கிறது.


இவ் வருஷத்தில் எங்கள் சபையில் நடந்த இன்னொரு விசேஷம் என்னவென்றால், அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “வாசந்திகை என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டதேயாம். இதுவரையில், எங்கள் சபை ஸ்தாபித்தது முதல் தமிழில் நான் எழுதிய நாடகங்களே ஆடி வந்தார்கள். இவ்வருஷம் எனது நண்பர் - கிருஷ்ணசாமி ஐயர் அப்புதிய நாடகத்தை எழுதி முடித்தபடியால் அது ஆடப்பட்டது. அதில் நாடகாசிரியராகிய கிருஷ்ணசாமி ஐயர் கதாநாயகியாகிய வாசந்திகை வேடம் பூண்டனர். இந்நாடகத்தில் ரங்கவடிவேலு எடுத்துக் கொள்ளக்கூடிய ஸ்திரீ பாத்திரம் ஒன்றுமில்லாதிருந்தது; ஆகவே நாங்கள் இருவரும் இதில் ஆடவில்லை . எனதாருயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதில்லை என்று முதன் முதல் தீர்மானித்துத் தன் மரணபர்யந்தம் அத்தீர்மானித்தினின்றும் தவறினவர் அன்று! இதைப்பற்றி நான் பிறகு எழுத வேண்டி வரும்.


இவ் வருஷமானது எங்கள் சபையின் சரித்திரத்தில் இன்னொரு விதத்தில் முக்கியமானதாயிருந்தது இது வரையில் வருஷா வருஷம் வரவிற்கும் செலவிற்கும் சரியாகப் போய்க்