பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

279





கொண்டிருந்தது. உதாரணமாக 1902 ஜுன் மாசம் 30ஆம் தேதிவரையில், வரவில் செலவு போக, கையிருப்பு மிகுதிப் பணம் ரூபாய் 1-15-8 தானிருந்தது! இவ்வருஷம் டிசம்பர் மாதம் நான்கு நாடகங்கள் நடித்து செலவு போக ரூபாய் 354-2-11 கையிருப்பு நின்றது. பிறகு இதில் ரூபாய் 250 புரசைவாக்கம் பண்டில் வைத்தோம். இவ்வருஷம் முதல்தான் எங்கள் சபைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தலைப்பட்டோம். இவ்வருஷம் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு பொக்கிஷதாராக இருந்தார். அவரது கைராசி நன்றாயிருந்தது போலும்!

எனக்கு ஞாபகமிருக்கிறபடி இவ்வருஷம் இன்னொரு விசேஷம் நடந்தது. இவ்வருஷம்தான் எங்கள் சபையின் இருப்பிடமானது, தம்புச்செட்டித் தெருவிலிருந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பாக, விக்டோரியா பப்ளிக்ஹாலில், தற்காலம் பட்சணம் தயாரிக்குமிடமானது எங்களுக்கு வாடகைக்குக் கிடைத்தது. அதில் எங்கள் படுதாக்கள் முதலிய சாமான்களை யெல்லாம் போட்டு வைத்தோம். சென்னையில் தம்புச் செட்டித் தெருவில் ஒரு மூலையில் இருப்பதை விட, விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னைக்கு மத்தியில் இருக்கிறது, டிராம் வண்டி சௌகர்யமுமிருக்கிறது. ஆகவே, அந்த இடத்திற்கு எங்கள் சபையை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தோம்.

அங்கிருந்த எங்கள் சாமான்களை யெல்லாம் சிந்தாதரிப் பேட்டையில் ஓர் இடத்தை வாடகைக்கு அமைத்து, அதில் வைத்துவிட்டு, நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேற்குப்பாகத்தில் குடி புகுந்தோம். பழைய கதையில் ஒட்டகமானது முதலில் மூக்குக்கு இடம் பெற்றதுபோல் இதைப்பெற்று, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபித்து விக்டோரியா பப்ளிக் ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதையும் பெற்றோம். எப்படியெனில், இப்பொழுது எங்கள் சபையில் படுதாக்கள் வைத்திருக்கும் இடம் காலியாயிருக்கக் கண்டு விக்டோரியாஹால் அதிகாரிகளிடமிருந்து அதை வாடகைக்குப் பெற்று, எங்கள் சாமான்களை அதில் கொண்டு வைத்தோம், முதலில். பிறகு, 1911ஆம் வருஷம் விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகத்தில் அதுவரையில் இருந்தசைக்கில் கிளப் (Cycle Club) உடைந்து போகவே, அதிகாரிகளிடமிருந்து அதையும் குடிக்