பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

நாடக மேடை நினைவுகள்




மேற்சொன்னபடி தனித்தனியாக ஒவ்வொரு ஆக்டரையும் தேர்ச்சி செய்த பிறகுதான், எல்லா ஆக்டர்களையும் ஒருங்கு சேர்த்து, மொத்த ஒத்திகைகள் ஆரம்பிப்பேன். இம்மாதிரியாக மொத்தமாய் ஆக்டர்கள் கூடி நடிக்கும் பொழுதுதான், அவரவர்கள் செய்ய வேண்டிய பை பிளே (By Play) என்ன என்பதைச் சொல்லிக் கொடுப்பேன். நாடக மேடையின்மீதேறி நாடகமாடியிராத இதை வாசிக்கும் சில நண்பர்களுக்கு இது இன்னதெனத் தெரியாதிருக்கலாம். ஆகவே இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். பை பிளே என்றால், அரங்கத்தில், ஒரு நடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றவர்கள் தாங்கள் பேச வேண்டிய வசனம் ஒன்றுமில்லா விட்டாலும், தாங்கள் செய்ய வேண்டிய காரியம், காட்டவேண்டிய முகக்குறிப்பு முதலியவைகளாம். இதற்கு என் நாடகமொன்றிலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். மனோகரன் நாடகத்தில் முதல் அங்கம் நான்காம் காட்சியில், மனோஹரன் மடிந்ததாக நம்பி, பத்மாவதியும் விஜயாளும் தீப் புகத் தீர்மானித்துப் புறப்படுகிறார்கள்; அச்சமயம் மனோஹரன் திடீரென்று ராஜப்பிரியனுடன் அரங்கத்தில் தோன்றுகிறான்; புஸ்தகத்தில் விஜயாளும் பத்மாவதியும் விரைந்து போய் மனோஹரனை ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள் என்று எழுதியிருக்கிறது; மேடையின் மீதிருக்கும் மற்ற ஆக்டர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இச் சந்தர்ப்பத்தில், அநேகக் கம்பெனிகள் . இதை ஆடும் பொழுது, மற்ற ஆக்டர்களெல்லாம், அசைவற்று நின்று கொண்டிருப்பதை, நான் பன்முறை பார்த்திருக்கிறேன். நம்முடைய பாகம் வரவில்லையே, அதுவரையில் நாம் சும்மாதான் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய தாத்பரியம் போலும்; ஆகவே, அவர்கள் நான் வேடிக்கையாய் எனது ஆக்டர்களுக்குக் கூறுவது போல “அவல் மென்று கொண்டு” இருப்பார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்ப்பார்களாயின், ஒவ்வொரு ஆக்டரும் இன்னின்னது செய்ய வேண்டுமென்று அவர்களுக்கே புலப்படும். முதலில் பௌத்தாயனன் தான் செய்த சூழ்ச்சி யெல்லாம் கெட்டு, தன்னுயிருக்கே ஹானி வந்ததே என்று பயந்து மெல்ல நழுவப் பார்க்கவேண்டும்; ராஜப்பிரியர், ஆதிமுதல் இந்தக்