பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

307


கபட சன்னியாசியின்மீது சந்தேகங் கொண்டவர்; மனோஹரன் முதலிய மற்றவர்களையும் கவனியாது ஓடிப்போய் பௌத்தாயனனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; மனோஹரனைத் தன் சொந்த மகன் போல் பாவித்து வந்த சத்தியசீலர், அளவிலாச் சந்தோஷம் கொண்டவராய் மனோஹரனிடம் நெருங்க வேண்டும்; பணிப்பெண்ணாகிய நீலவேணி, வசந்தசேனை செய்த சூதெல்லாம் பயன்படாமற் போயிற்றே என்று மகிழ வேண்டும். இவ்வாறு மற்ற ஆக்டர்களெல்லாம் செய்வ துடன், அவரவர்களுடைய மனோபாவத்திற்குச் தக்கபடி, முகக்குறிப்பு முதலிய அபிநயத்தைக் காட்ட வேண்டும். இப்படிச் செய்வதைவிட்டு, இந்நான்கு ஆக்டர்களும், “அவல் மென்று” கொண்டிருந்தால், இக்காட்சி என்னமாய் நன்றாயிருக்கும் என்பதை எனது நண்பர்களே கவனிப்பார்களாக.

இம்மாதிரியான பை பிளே ஒவ்வொரு ஆக்டருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதி அவசியமாம். இது சரியாக இல்லாவிட்டால் எந்த நாகடமும் சோபிக்காது. அரங்கத்தில் ஒரு ஆக்டர் நன்றாய் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடன் இருக்கும் மற்ற ஆக்டர்கள், அதற்குத் தக்கபடி, “பை பிளே” காட்டாதபடியால், அந்த ஆக்டர் நன்றாய் நடித்ததெல்லாம், சபையோர் மனத்தில் உறுத்தாததை நான் பன்முறை கண்டிருக்கிறேன். இக் குற்றம் முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய நாடகக் கம்பெனி களில் நான் கண்டிருக்கிறேன். தென் இந்திய நாடக மேடை சீர்பட வேண்டுமானால், இவர்கள் இந்த ‘பை பிளே’யை முக்கியமாகக் கவனிக்க வேண்டுமென்பது திண்ணம்.

இம் மாதிரியாக, இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில் எனது ஆக்டர்களுக்கு நான் “பை பிளே” சொல்லி கொடுத்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இங்கெழுதுகிறேன். இந் நாடகத்தில் மூன்றாம் அங்கம் இரண்டாம் காட்சியில் அமலாதித்யன் தன் தந்தை மடிந்த விதத்தைப்போல் ஒரு நாடகத்தை வேஷதாரிகள் நடிக்கச் செய்ய, அதில் தூங்குகிற அரசன் காதில், அவனது சகோதரன் விஷம் விடுவதுபோல் நடிக்கப்படும் பொழுது இதைக் கண்டு, நான் செய்த கொடுங்கொலையை அமலாதித்யன்