பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

நாடக மேடை நினைவுகள்


கலங்கியே பேசத் தொடங்கினான்; ஆயினும் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை . பிறகு ஒருவாறு நிதானம் கொண்டவனாய், தான் பைத்தியக்காரனைப்போல், நடந்ததையே, தனக்கொரு உதவியாகக் கொண்டு தன் சிற்றபனாகிய அரசன் தன்மீது சங்தேகங் கொள்ளாதிருக்கும்படி, தான் பழிவாங்கத்தக்க சமயம் வாய்க்கும் வரையில், பைத்தியக் காரனைப் போல் நடித்து வந்தான் என்பது என் தீர்மானம். இதை மனத்தில் வைத்துக்கொண்டே இப் பாத்திரத்தை நான் நடித்தேன்.

அன்றியும் இப் பாத்திரத்தை நடிப்பதில் எனக்கு இன்னொரு கஷ்டம் நேர்ந்தது. இந்தப் பாத்திரத்தை மேடையில் நடித்தபொழுது, எட்மண்ட்கீன் (Kean) என்பவர் இவ்வாறு நடித்தார்; கெம்பில் (Kemble) என்பவர் இவ்வாறு நடித்தார்; சர் ஹென்ரி இர்விங் (Sir Henry Irving) என்பவர் இவ்வாறு நடித்தார்; பார்பேன் (Burbage) என்பவர் நடித்தது இவ்விதம்; சர்பீர்போம் டிரீ (Sir Beerbohm Tree) நடித்தது இவ்விதம்; அமெரிக்கதேசத்து ஆக்ட்ராகிய பூத் (Booth) என்பவர் நடித்த மாதிரி இது; சர் போர்ப்ஸ் ராபர்ட்சன் (Sir Forbes Robertson) நடித்தது இம்மாதிரி; சர் பிராங்க் பென்சன் (Sir Frank Benson) இம்மாதிரி நடித்தார்; இன்னும் மற்ற பிரபல ஆக்டர்கள் இப்படி இப்படி நடித்தார்கள் என்பதை எல்லாம் வாசித்தபொழுது, எனக்கு, இதில் எதை ஏற்றுக்கொள்வது, எதைத் தள்ளிவிடுவது என்கிற ஒரு பெரிய சங்கையுண்டாயிற்று. இவற்றையெல்லாம் படித்து, என் மூளையும் கொஞ்சம் சிதறிப்போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இத் தருவாயில் இன்னது செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றபொழுது, எனது நண்பர், நமது நாட்டின் நன்மைக்காகக் காங்கிரஸ் மகாசபையில் பல வருஷங்கள் உழைத்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர், ஒரு சந்தர்ப்பத்தில், கல்வியின் பயனைப்பற்றிக் கூறிய சில வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்தது; அவர் சொன்ன தாவது, “கல்வியின் முழுப்பயனையும் பெற வேண்டுமென்றால், நாம் கற்ற பல விவரங்களையும் மறந்து அவற்றின் சாரம் மாத்திரம் நமது மனத்தில் நம்மையும் அறியாதபடி, நாம் தங்கச் செய்ய வேண்டும்!” என்பதாம். இதையே நான் ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு, பிரபல