பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

313


சர். சுப்பிரமணிய ஐயர்; அதன்மீது நான் வாஸ்தவத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று - ‘எங்கள் சபையில் தமிழ் கண்டக்டர், தமிழில் ஹாம்லெட் நாடகத்தை ஒத்திகை செய்து கொண்டிருக்கிறான். அவன் அந்த நாடகம் ஆடப்படுகிற வரையில் வேறு எந்த நாடகத்தையும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான் என்று தெரிவித்தேன். யார் அப்படிப் பிடிவாதம் செய்வதென்று அவர் கேட்க, உன் பெயரைச் சொன்னேன். அதன் மீது அவர் ‘எந்த சம்பந்தம்? மிஸ்டர் விஜயரங்கம்’S பிள்ளையா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்படியா? எனக்குச் சம்பந்தத்தைத் தெரியும். (அவரும் என் தந்தையும் அத்யந்த சினேகிதர்களாகவிருந்தவர்கள்; என்னையும் அவர் பன்முறை பார்த்திருக்கிறார்.) ‘நீ சம்பந்தத்தினிடம் போய், அவன் எங்களுடைய என்டர்டெயின்மெண்டில் ஏதாவது நாடகத்தில் சில காட்சிகள் ஆடினால், அவனது ‘ஹாம்லெட்’ நாடகத்திற்கு பேட்ரனேஜ் (Patronage) நான் கொடுப்பதாகச் சொல், எப்படியாவது ஒப்புக்கொள்ளச் சொல்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! என்று சொல் பிறகு மற்ற சமாச்சாரங்களையெல்லாம் அப்புறம் தீர்மானித்துக் கொள்ளலாம்?” என்று கூறினார். இந்தத் தர்மசங்கடத்திற்கு நான் என்ன செய்வது? ஒரு பக்கம் எனது ஆக்டர்களெல்லாம் கவர்னர் முன்னிலையில் ஆட வேண்டுமென்று தங்களுக்கு இச்சையிருப்பதைத் தெரிவித்துக்கொள்கின்றனர். மற்றொரு பக்கம், என் தந்தையின் அத்யந்த நண்பராகிய சர். சுப்பிரமணிய அய்யர், ஹைகோர்ட்டு ஜட்ஜ் கேட்டனுப்பியிருக்கிறார். அன்றியும் பச்சையப்பன் கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டங்களில் இரண்டொரு முறை, நான் புஸ்தகப் பரிசு பெற்றபோது இவர் எனக்கு என் தந்தை முன்னிலையில், சந்தோஷ வார்த்தைகள் கூறியிருக்கிறார்; முக்கியமாக, என் அமலாதித்ய நாடகத்திற்குத்தான் வருவதாகச் சொல்லியனுப்பியிருக்கிறார், என்று இவைகளையெல்லாம் யோசித்துச் சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். இத்தனை வருடங்கள் பொறுத்து இதைப்பற்றி யோசித்துப் பார்க்கும்பொழுது அந்தக் கடைசி காரணம்தான் முக்கியமாக என்னை