பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

நாடக மேடை நினைவுகள்


ஒப்புக்கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன். உடனே எனது நண்பர், இதைத் தெரிவிக்க, அந்த மீட்டிங் நடக்கு மிடத்திற்குப் போய்விட்டார். எனது ஆக்டர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனக்கும், ஒரு விதத்தில் நமது தீர்மானத்தினின்றும் தவறுகிறோமேயென்று இருந்த போதிலும் நமது சபைக்கு இவ்வளவு பெருமையடைகிறதே என்ற சந்தோஷம்தான்.

இங்கு, பெரிய கதையில் கிளைக்கதை வருகிறதுபோல், அமலாதித்யன் நாடகம் ஆடிய கதையைச் சொல்ல வந்தவன், இடையில், கவர்னர் முன்னிலையில் நாங்கள் ஆடிய காட்சிகளைப்பற்றி எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

போன எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனபடியால், நாங்கள் அன்றைய ஒத்திகையை முடித்து விட்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவர் வந்தவுடன், “அவர்கள் மிகவும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். பிறகு என்ன ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, உனது அபிப்பிராயம் என்னவென்று என்னைக் கேட்டார்கள். அதற்கு நான், நீங்கள் சொல்லுகிறபடி ஒருமணி நேரத்தில் முடிய வேண்டுமென்றால், முழு நாடகம் ஒன்றும் போட முடியாது. ஒரு சோககரமான காட்சியும் ஒரு ஹாஸ்யமான காட்சியும்தான் ஆடமுடியும் என்றேன். அதற்கு அங்கிருந்த பாடம் துரையவர்கள் (Boddam J) உங்கள் சபையார் இரண்டு காட்சிகள் ஆடட்டும், அதில் எது சோககரமானது, எது ஹாஸ்யகரமானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றார். (பகிடியாய்ப் பேசிய இவரது அபிப்பிராயம் என்னவென்றால், நீங்கள் ஹாஸ்யம் என்று நினைக்கும் காட்சி எங்களுக்குத் துக்கத்தை விளைவிக்கலாம்; சோக ரசம் என்று நீங்கள் நினைப்பது, எங்களை நகைக்கச் செய்யலாம்! என்பதாம்.) நாம் என்ன ஆட வேண்டுமென்பதை இப்பொழுதே சொல்லுங்கள்! நாளை அவர்களுக்குத் தெரிவிப்பதாகச் சொல்லி வந்திருக்கிறேன்” என்றார். பிறகு நாங்கள் எல்லோரும் ஆலோசித்து ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தினின்றும், குஸ்தி பிடிக்கும் காட்சியில் அநேக ஆக்டர்களுக்குப் பாகம் இருக்கிறது என்று அதை ஒன்றாக ஏற்படுத்தினோம். சோககரமான காட்சி