பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

நாடக மேடை நினைவுகள்


வேண்டுமென்று கேட்கப்பட்டோம். அடிக்கடி எல்லோரும் இம்மாதிரியாகக் கேட்கிறார்கள். இது என்ன பெரிய கஷ்டமாயிருக்கிறதென, பிறகு சபையின் பொதுஜனக் கூட்டத்தின் (General Body) உத்தரவின்றி இம்மாதிரியான கூட்டங்களில் சபையார் ஆடக் கூடாதென்றும் ஒரு தீர்மானம் செய்யப்பட்டது!

இனி இக் கிளைக் கதையை இதனுடன் முடித்து, மூலக் கதைக்குப் போகிறேன். இந்த “அமலாதித்யன்” நாடகத்திற்கு ஒத்திகைகள் மிகவும் கண்டிப்பாய் நடத்தியதுமன்றி இதற்காக வென்று புதிய படுதாக்களும், உடுப்புகளும் சித்தம் செய்தோம்; ஒரு நாள் எல்லா உடுப்புகளுடன் மேடையின்மீது ஒத்திகையும் போட்டுப் பார்த்தோம்.

இந்த நாடகமானது 1906ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது என்கிற மேற்கண்ட வாக்கியத்தை நான் எழுதும் பொழுது, அதைப்பற்றிய ஒரு வேடிக்கையான சமாச்சாரம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தெரிவித்தபடி இங்கு எழுதுகிறேன்.

அவர் இந் நாடகத்திற்கு முந்திய தினம், சாயங்காலம் என்னிடம் வந்து, “சம்பந்தம்! ஒரு சமாச்சாரம் கேட்டாயா? இன்று மத்தியானம், கோர்ட்டில் நடந்தது தெரியாதே உனக்கு? பத்தரை மணிக்கு, சர் சுப்பிரமணிய ஐயர், தன் அறைக்குக் கையில் தடியைப் பிடித்துக்கொண்டு, பட்! பட்! என்று போய்க் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து சற்று நின்று ‘ஸ்ரீனிவாச ஐயங்கார், நாளைக்கு நாடகம் என்று சொன்னீர்களே, அது எங்கே? மெமோரியல் ஹாலில்தானே நடக்கப் போகிறது?’ என்று கேட்டார். எனக்கு அடங்காச் சிரிப்பு வந்தது. ஆயினும் அதை அடக்கிக்கொண்டு, மெமோரியல் ஹாலில் அல்ல, விக்டோரியா பப்ளிக் ஹாலில் என்று தெரிவித்து, விக்டோரியா பப்ளிக் ஹால் பீபில்ஸ் பார்க்கில் இன்ன இடத்திலிருக்கிற தென்பதையும் தெரிவித்தேன்! இல்லாவிட்டால் இந்தக் கிழவனார், நாளைக்கு மெமோரியல் ஹாலுக்குப் போய் அங்கு ஒன்று