பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

317


மில்லாததைக் கண்டு, வீட்டுக்குத் திரும்பிப் போயிருப்பார்!” என்று நகைத்துக் கொண்டே தெரிவித்தார்.

இனி மறுநாள் நடந்த இந் நாடகத்தைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கிற சமாச்சாரங்களை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

அன்று நாடகம் நடந்ததில் எனக்கு முக்கியமாக ஞாபமிருக்கிற விஷயம் என்னவென்றால், இது எப்படி முடியுமோ என்று என் மனத்தில் பெரும் பயம் குடி கொண்டிருந்ததே! ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியியற்றிய நாடகங்களிலெல்லாம் சிறந்த இந்நாடகத்தை, நான் தமிழில் மொழி பெயர்த்தது, எப்படி இருக்கிறதெனச் சபையார் நினைக்கிறார்களோ என்று முதல் பயம்; இரண்டாவது, ஹாம்லெட் (அமலாதித்யன்) வேடத்தில் மிகவும் கீர்த்தி பெற்ற ஆக்டர்களும் சூட்சும புத்தியுடைய அறிவாளிகளை முற்றிலும் திருப்தி செய்விக்கவில்லையே? நாம் எப்படிக் கற்றறிந்தவர்கள் கூடிய இச்சபையாரைத் திருப்தி செய்விக்கப்போகிறோம் என்கிற பயம்; மூன்றாவதாக, எனது நண்பர் ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களெல்லாம், சரியாக நடிப்பார்களோ இல்லையோ என்கிற பயம்; இவ்வாறு பலவிதமான பீதியினால் கலக்கப்பட்டிருந்தேன் என்பது திண்ணம். நான் பி.ஏ., பி.எல் பரிட்சைக்குப் போனபோதுகூட அவ்வளவு பயப்படவில்லை.

இப் பயமானது கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டகன்றது. அன்றிரவு ஈசன் அருளால் விக்டோரியா பப்ளிக் ஹால் முழுதும் இடமில்லாது நிரம்பியிருந்தது. நான் பேசத் தொடங்கியது முதல் சந்தடியற்றிருந்ததென நான் கூற வேண்டும். நான் நேராகச் சபையோரைப் பார்ப்பதில்லை என்று எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆயினும், நான் மேடையிலிருக்கும் பொழுது, என் வார்த்தைகளை எப்படி அவர்கள் கவனிக்கிறார்களென்று அறியும் சக்தி சிறிது எனக்குண்டென நினைக்கிறேன். முதல் காட்சியில், என் கடைசி வார்த்தைகளைப் பேசிவிட்டு நான் அரங்கத்தினின்று போக, திரை விடப்பட வே, கரகோஷம். செய்தனர். ஆகவே நன்றாயிராமல் போகாது என்று என் மனத்தைத் தைரியம் செய்து கொண்டேன். எனது