பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

நாடக மேடை நினைவுகள்


சங்கீதத்தில் மிகுந்த வல்லமைசாலியாயிருந்தும்; இந்நாடகத் தில் இவர் பாடுவதற்கு, ஒரே பாட்டுதான் இருந்தது. இதற்குக் காரணம் முக்கியமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில், சங்கீதத்தை நான் குறைக்க வேண்டுமென்று தீர்மானித்ததே; இருந்தும் அந்த ஒரு பாட்டை மிகவும் நன்றாய்ப் பாடிச் சபையோரின் கரகோஷத்தைப் பெற்றனர்.

முன்பே நான் குறித்தபடி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு, அபலை வேஷம் பூண்டனர். நான் கற்பித்தபடி ஒன்றையும் விடாது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக நடித்துச் சபையோரின் நன்மதிப்பைப் பெற்றார். முக்கியமாக அபலை பைத்தியக்காரியாக வரும் காட்சியில், வெள்ளை வஸ்திரம் உடுத்தி, பைத்தியத்தில் பாடும் பாட்டுகளைப் பாடி, வந்திருந்தவர்கள் மனத்தைக் கவர்ந்தனர். இவர் இக்காட்சியில் நடித்ததைப் பார்த்து, ஸ்பிளென்டிட் (Splendid), மாக்னிபிசென்ட் (Magnificent) என்று கூறி, சர். சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தாரை தாரையாகக் கண்ணீர் விடுத்ததாக அவரருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினர். அபலையின் சவத்தைச் சமாதியில் புதைக்கும் காட்சியில், வந்திருந்த மாது சிரோமணிகள் அநேகர் கண்ணீர் விட்டனர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நடித்த அநேக ஸ்திரீ பாத்திரங்களில், இந்த அபலையாக நடித்தது ஒரு மிகச் சிறந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவர் இந்த வேடத்தில் நடித்தபடி எழுதிய படமொன்று, இன்னும் சிந்தாதரிப்பேட்டையில் இவரது வீட்டில் இருக்கிறது. என்னைப்போல் இவரும் இந் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமோ என்று பயந்து கொண்டிருந்தவர், கடைசியில் பைத்தியக்காரக் காட்சியில் மிகவும் நன்றாக நடித்ததாக எங்கள் சபையார் புகழ மிகவும் சந்தோஷப்பட்டார் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது. இதை எழுதும்பொழுது, இவர் எனது துர் அதிர்ஷ்டத்தால் சிறுவயதில் மரித்த பொழுது நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றி இத்தனை வருஷம் சென்றும், அது எனக்கு அடங்காத் துக்கம் விளைவிப்ப தாயினும், இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவர் இந் நாடகத்தில் அபலையாக நடித்த பொழுது எப்படி நாடக மேடையில் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சமாதிக்குக்