பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

323


கொண்டு போனார்களோ, அதே மாதிரியாக, இவர் மரித்தபொழுதும் புஷ்பப் பல்லக்கில் அலங்காரம் செய்து ஸ்மாசனத்திற்குக் கொண்டு போனோம்! இதைப்பற்றி அதே மாதிரியாக இருந்ததென எனது நண்பர் ராவ்பஹதூர் கிருஷ்ணராவ் பான்ஸ்லே , ஹிந்துப் பத்திரிகையில் எழுதினார். மேடையில் லீலாதரனாக நடித்து சவத்துடன் சென்றது போல், இவரது மைத்துனர் தாமோதர முதலியார், இச்சமயமும் உடன் சென்றனர். ஒரு வித்தியாசம் மாத்திரம் இருந்தது; நாடகமேடையில் அமலாதித்யனாக நடித்த நான் ஒரு புறமாய் நின்றுகொண்டு அபலையைப் பாடைமீது கொண்டு வரும் பொழுது, இதெல்லாம் நாடகம்தானே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தேன், அச்சமயம்; இச்சமயம், நாடகமாய் நடித்தது வாஸ்வதமாய் முடிந்ததே என்று, இதை எழுதும் பொழுது நான் அழுவது போல், அழுது கொண்டு அமலாதித்யனாக நடித்த சம்பந்தம் பாடையின் பக்கத்தில் சென்றான்!

தாமோதர முதலியார் லீலாதரனாக நடித்தார். இவருக்கு இந்த வேஷம் முதலில் நான் கொடுத்தபொழுது, இதைச் சரியாக நடிப்பாரோ என்னவோ என்று சந்தேகப்பட்டேன். ஆயினும், ஒத்திகைகளில் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று நாடக தினத்தில் நான் எண்ணியதற்கு மேலாக நடித்தார். இவரும் நானும் இந்நாடகத்தில் நடித்ததைப்பற்றி ஒரு சமாச்சாரம் எனக்கு முக்கியமாக நினைவிற்கு வருகிறது. கடைசிக் காட்சியில் நாங்களிருவரும், ரேபியர் (Rapier) என்னும் கத்திகளைக் கையில் கொண்டு சண்டை போட வேண்டியிருக்கிறது. இதற்காக ஒத்திகைகளில் பன்முறை, அவர் இப்படி என்னைக் குத்த, நான் இப்படித் தடுக்க வேண்டும்; நான் அவரை இப்படிக் குத்த, அவர் இன்னபடித் தடுக்க வேண்டும் என்று கத்தி வரிசிகளையெல்லாம் பழகி வைத்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சிறு வயதில் பீபில்ஸ் பார்க் பேரில் (Fair) 1885-86-87 ஆம் வருஷங்களில் பார்த்திருந்த பென்சிங் (Fencing) மிகவும் உபயோகப்பட்டது. பென்சிங் என்றால், தற்காலத்திய கோல்யுத்தம் அல்ல; கூர்மையான இரும்புக் கம்பிகள் போன்று மெல்லிய கத்திகளைக் கையிற் பிடித்து யுத்தம் செய்வதாம். என் முரட்டுத்தனத்தை அறிந்த முதலியார் அவர்கள், “வாத்தியார்,