பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

331


பயத்தை மனத்தில் வகித்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்தது; இம்முறை, மேற்சொன்னபடி, அந்தக் கஷ்டம் எடுத்துக்கொள்ள அசக்தனாகி, அதைச் சபையோர் கவனிக்கப் போகிறார்களா என்று எண்ணினவனாய், முகத்தைச் சற்றே திருப்பிக்கொண்டு, நான் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசினேன். பலன்? உடனே ஹாலிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கற்றறிந்த எனது நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்; முன்புபோலில்லை! ஏதோ குறையிருக்கிறது; என்று அவர்கள் மனத்தில் பட்டுவிட்டது. இவ்விதமாக அநேக விஷயங்களில், நமது குறை மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி, நமது மனத்தை நாமே மோசம் செய்து கொள்ளுகிறோம்.

இவ்வருஷம் (1906) எங்கள் சபை நீலகிரிக்குப் போய், உதகமண்டலத்தில் 3 நாடகங்கள் ஆடியது. 1897 இல் பெங்களூருக்குப் போய், நஷ்டமடைந்து வந்தபிறகு, இந்த ஒன்பது வருடங்களாக, வெளியே போகிற எண்ணத்தை விட்டோம். இனி வெளியிற் போவதில்லை என்று தீர்மானித்தோம் என்றே சொல்ல வேண்டும். அத்தீர்மானத் தினின்னும் இவ்வருஷம் மாறியதற்கு ஒரு காரணமுண்டு. எங்கள் சபையில் தெலுங்கு ஆக்டராகச் சேர்ந்த பி. ராம மூர்த்தி பந்துலு நீலகிரிக்கு ஓவர்சியராக மாற்றப்பட்டார்; மற்ற இரண்டு ஆக்டர்களாகிய அ.கிருஷ்ணசாமி ஐயரும், சி. பாலசுந்தர முதலியாரும் கவர்ன்மெண்டு செக்ரடரியேட் (Secretariat) ஆபீசில் இருந்தபடியால், கோடைக் காலத்தில் அந்த ஆபீசுடன், நீலகிரிக்குப் போக நேர்ந்தது; உதகமண்டலத்தில் ஒரு சிறு நாடக சாலையுமிருந்தது; இந்த ஹேதுக்களெல்லாம் இவ்வருஷம் ஒருங்கு சேரவே, அவ்விடமிருந்து எங்கள் சபை அங்கத்தினராகிய மேற் சொன்ன மூவர்களும், சபையானது, அவ்விடம் வந்து நாடகமாடினால் நன்றாயிருக்கும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நாங்கள் செய்கிறோம். நஷ்டம் வராமற்படி பார்த்துக் கொள்ளுகிறோம் என்று எழுதினார் கள். எங்கள் சபை ஆக்டர்களுக்கும் (நான் உட்பட) நீலகிரிக்குப் போக வேண்டும் என்னும் ஆசை பிறந்தது. எங்கள் சபையின் நிர்வாக சபையாரும் ஒப்புக் கொண்டனர்.