பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

நாடக மேடை நினைவுகள்


கருணைக் கடவுளின் கிருபையால் 8 மணிக்கெல்லாம் மழை நின்று விட்டது. மழை நின்றதும், வெளியில் வந்து பார்த்தால், எங்கும் ஒருவித மூடு பனி சூழ்ந்திருந்தது. இதென்ன இப்படியிருக்கிறதே என்று நான் பயந்தபொழுது, எனது நண்பர் சி. பாலசுந்தர முதலியார் “நீங்கள் பயப்படாதீர்கள் வாத்தியார், இனி மழை வராது. அன்றியும் ஒத்திவாசிகளெல்லாம், இம்மாதிரியான மூடு பனிக்கு அஞ்சமாட்டார்கள்! இப்பனியில் நடப்பதுதான் இங்குள்ள வர்களுக்கு ஒரு வினோதமாகும்!” என்று தைரியம் சொன்னார். இவர் சொன்னதற்கேற்ப, மழை நின்ற ஒரு மணி அவகாசத்திற்கெல்லாம், நாகடசாலை ஜனங்களால் நிரம்பிவிட்டது! அந்த நாடகசாலை எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு டிக்கட்டுகள் விற்றுப் பிறகு வருபவர்களுக்கு இடம் இல்லாமல், நிறுத்தி விட்டோம். இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சிறு விஷயம் ஞாபகம் வருகிறது. நாடகம் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கும் பொழுது, டிக்கட்டுகள் விற்கும் இடத்தில், எனது நண்பர் சபையின் பொக்கிஷதாரராகிய வி. ரங்கசாமி ஐயங்கார், யாருடனோ உரத்த சப்தமாய்ச் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரகசியம் பேசினாலே பக்கத்து வீட்டிற்குக் கேட்கும்! சண்டை போட ஆரம்பித்தால்! வேஷம் போட்டுக்கொண்டிருந்த நான் பாதி வேஷத்துடன் அவ்வறைக்குப் போய்க் கேட்க, நடந்த செய்தியைத் தெரிவித்தார்; அவருடன் வாதாடிக் கொண்டிருந்த மனிதன், அரைமணி நேரத்துக்கு முன் ஒரு எட்டு அணா டிக்கட்டு கேட்டானாம்; ‘எட்டணா வகுப்பில் இடமில்லை! இனி எட்டணா டிக்கட்டு விற்க முடியாது!’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அந்த மனிதன் ஒரு மைல் தூரம் திரும்பிப் போய்த் தனக்குத் தெரிந்தவர்களிட மிருந்து, இன்னொரு எட்டணா வாங்கிக்கொண்டு வந்து ஒரு ரூபாய் டிக்கட்டு கேட்டானாம்; இதற்குள்ளாக ஒரு ரூபாய் வகுப்பும் நிரம்பிவிட்டது. “ஆகவே, நான் என்ன செய்வது? ஒரு ரூபாய் டிக்கட்டு இல்லை. இனி இரண்டு ரூபாய் டிக்கட்டுதான் இருக்கிறது என்று நான் சொன்னால், இவன் என்னோடு சண்டை போடுகிறான். இவன் ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்து ஒரு ரூபாய் கொண்டு வந்தால் எனக்கென்ன? நான் என்ன செய்யக்கூடும்? ‘நீங்கள்தானே