பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

நாடக மேடை நினைவுகள்


நடிக்காமலாவதிருக்க வேண்டும் அல்லது நாடகம் பார்க்க வந்திருப்பவர்கள் அவ்வளவாக நாடக ரசிகர்களாக இல்லாமலிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். இம்முறை எனது நண்பர்கள் ஆ. கிருஷ்ணசாமி ஐயர் ரத்னாங்கியாகவும், சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் சென்னையில் நடித்ததைவிட அதிக விமரிசையாக நடித்தனர் என்றே கூற வேண்டும். எந்தச் சபையிலும், அதை அறிந்து அனுபவிக்கத்தக்க ரசிகர்கள் எதிரில் இருக்கிறார்கள் என்று பட்டால், அந்தக் கலைஞனுக்கு உற்சாகம் உண்டாகி, தன் முழு சாமர்த்தியத்தையும் தன்னையும் அறியாதபடி சில சமயங்களில் காட்டுகிறான்; எதிரிலிருப்பவர்கள் மண்டு களாகி மௌனமாயிருந்தால், எப்படிப்பட்டவனுக்கும் உற்சாகம் சிறிது குறைந்துதான் தீரும். இவ்வாறு வெகு விமரிசையாய் நடத்தப்பட்ட இன்றிரவு நாடகத்தில், ஒரு சந்தர்ப்பம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இதை அன்றிரவே எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார் என்னிடம் வந்து தெரிவித்தார். அன்று பந்தோபஸ்துக்காக வந்திருந்த போலீஸ்காரன் ஒருவன், அவர் உத்தரவு பெற்று ஒருபுறமாக வந்து, சுவரின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், சாரங்கதரன் தன் அன்னையைவிட்டுப் பிரிந்து கொலைக் களம் கொண்டு போகப்படும் காட்சியில், கிருஷ்ணசாமி ஐயரும் நானும், மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்த பொழுது, கண்ணீர் தாரை தாரையாக விட்டழ ஆரம்பித் தானாம். எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அவன்மீது பரிதாபங் கொண்டவராய் அவனைத் தேற்றுமாறு, ஏனடா அப்பா அழுகிறாய்? இதெல்லாம் நாடகங்தானே!” என்று கூற, அந்தக் கான்ஸ்ட பில் “இருங்க சார்! இருங்க சார்! என்னை அலட்டாதீர்கள்! என்ன நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைத்து, காட்சியின் கடைசிவரையில் அழுது கொண்டே இருந்தானாம். காட்சியை கண்டு கண்ணீர் விட்டழும் சுகத்தினின்றும் அவன் கலைக்கப்பட இஷ்டப்படவில்லை!

ஒத்தியில் (Ooty) நாங்கள் ஆடிய நாடகத்தைப்பற்றி இன்னொரு விஷயம் எழுத விரும்புகிறேன். இங்கு ஒவ்வோர் இரவும் சுமார் 5 மணிநேரம் நாடகமாடியும் கொஞ்சமாவது எங்களுக்கு வியர்க்கவில்லை; சிரமம்