பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/359

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

நாடக மேடை நினைவுகள்




இன்னொரு சிறுகதை! மறுநாட் காலை எங்கள் 16 வண்டிகளும் வரிசையாக மேட்டுப்பாளையம் வரும் பொழுது அங்கிருந்த நாட்டுப்புறத்தார், ‘இது யாரடா இத்தனை வண்டிகளில் வருகிறது!’ என்று வியந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், “இது யாரடா இத்தனை வண்டிகளில் வருவது?” என்று கேட்டான். அதன்மீது, எனது நண்பர் சி. ரங்கவடிவேலுடன் ஒரு வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நான், இக் கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது கேட்போம் என்று, தலையை நிமிர்த்திக் கேட்டேன். அக் கேள்விக்கு மற்றொருவன், “யாரோ, மகாராஜாவின் அரண்மனையைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்!” என்று பதில் உரைத்தான். உடனே என் மனமெனும் தர்மாமிடர் (Thermometer) மூன்று டிகிரி (degree) மேலே போச்சுது! உடனே பக்கத்திலிருந்த இன்னொருவன், “இல்லையடா! இவர்கள் யாரோ கூத்தாடிகள்!” என்று சொன்னான். உடனே என் தர்மாமிடர், பத்து டிகிரி, திடீரென்று இறங்கி விட்டது.

இந்த 1906ஆம் வருஷத்தில்தான் எங்கள் சபையார் சாயங்காலத்தில் நாடகமாடுவதை ஆரம்பித்தனர். இதற்கு முன்பெல்லாம், இரவில் 9 மணிக்கு ஆரம்பித்து, மறு நாட்காலை சுமார் இரண்டு மணிவரையில் ஆடுவது வழக்கமாயிருந்தது. இராத்திரி ஆடுவதனால் ஆக்டர்களுக்கும் கஷ்டம்; நாடகம் பார்க்க வரும் ஜனங்களுக்கும் கஷ்டமாயிருந்தது. ஆக்டர்கள் 9 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்றால், 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு வேஷம் பூண ஆரம்பித்து, 9 மணிக்கு மேல் 4 அல்லது 5 மணி சாவகாசம் மேடையின் மீது ஆடிவிட்டு, பிறகு வேஷத்தைக் களைய ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிவந்தது. அன்றியும் 3 மணிக்கு வீட்டிற்குப்போனால் சரியாகக் தூக்கம் வருவதில்லை . இப்படி விழிப்பதனால், மறுநாள் எல்லாம் உடம்பு மிகவும் ஓய்ச்சலாயிருக்கும்; நாடகம் பார்க்க வருபவர்களுக்கு இவ்வளவு கஷ்டமில்லா விட்டாலும், அவர்களும் இரவில் நித்திரை நீக்கவேண்டி யவர்களாயிருக்கிறார்கள்; இரண்டு மணி வரையில் நாடகம் பார்த்து விட்டு வீட்டிற்குப் போனால் அவர்களுக்கும் உடனே தூக்கம் வருவது கடினம். இத்தகைய கஷ்டங்களை