பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

345


யெல்லாம் கருதி இதற்கு ஏதாவது யுக்தி செய்ய வேண்டுமென்று ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பலமுறை யோசித்ததுண்டு. இரவு இரண்டு மூன்று மணி வரையில் நடக்கும் நாடகங்களைக் குறுக்கி ஒருமணிக்கெல்லாம் முடிக்கும்படி பிரயத்தனம் செய்து பார்த்தோம்; அதிலும் பயன்படவில்லை; சாயங்காலங்களில், இங்கிலாந்து முதலிய தேசங்களில் மேடினீ (Matinee) நாடகங்கள் நடைபெறுவ தாகக் கேள்விப்பட்டிருந்தோம்; ஆயினும் அதன்படி இந்தியாவில் வைத்துக் கொண்டால், ஜனங்கள் வருவார்களோ என்பது பெரும் சந்தேகமாயிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், பாரசீகக் கம்பெனியார் ஞாயிற்றுக் கிழமைகளில் சாயங்காலத்தில் சில நாடகங்கள் ஆடினார்கள். அதற்குச் சாதாரணமாக ஜனங்கள் வரத் தலைப்பட்டதைக் கண்டோம். அவர்களுக்குச் சாயங்காலங்களில் வரும் ஜனங்கள், நமக்கு ஏன் வரக்கூடாது என்று தைரியமடைந்த வர்களாய், இவ்வருஷம் ஒரு நாடகம் சாயங்காலத்தில் ஆடிப் பார்ப்போம் என்று யோசித்தோம். இதை நாங்கள் எங்கள் நிர்வாக சபையில் முதலில் பிரேரேபணை செய்த பொழுது, அவர்களில் பெரும் பாலோர் ஆட்சேபித்தனர். மெல்ல அவர்களுடன் பேசி, ஒரு முறை முயன்று பார்ப்போம், சரிவராவிட்டால் விட்டு விடுவோம் என்று சொல்லி, இவ்வருஷம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எனது “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை, 6 மணி முதல் 9 மணி வரையில் ஆடுவதாகப் பிரசுரம் செய்து அப்படியே நடத்தினோம். இப் புது வழக்கம் நாடகபிமானிகளுக்கு முதலில் ஏதோ ஒரு மாதிரியாகத் தோன்றியபோதிலும், வந்தவர்களெல்லாம் இதனாலுண்டான சவுகரியத்தைக் கண்டு, இதுவே நல்ல மாதிரி என்று ஒப்புக்கொண்டனர். முன்பு ஆட்சேபித்த ஆக்டர்களும், இதனால், தங்களுக் குண்டான சிரமக் குறைவை அனுபவித்தவர்களாய், இப்புதிய வழக்கத்திற்கு இணங்கினர். இம்மாதிரி நாங்கள் இரண்டு மூன்று நாடகங்கள் சாயங்காலத்தில் நடத்தின பிறகு இராக்காலத்தில் வரும் ஜனங்களைவிட சாயங்கால நாடகங்களுக்கு ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர்! இதற்கு முக்கியக் காரண்ம், எங்கள் சபையின் நாடகங்களுக்கு வருபவர்கள் கற்றறிந்த உத்யோகஸ்தர்கள்