பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதினெட்டாவது அத்தியாயம்

1907ஆம் வருஷத்தின் முதலில், இலங்கையிலிருந்து ஹானரபில், பி. ராமநாதம் என்பவர் சென்னைக்கு வர அவரது வரவேற்கையாக விக்டோரியா ஹாலில், ‘அமலாதித்யன்’ நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ‘விரும்பிய விதமே’ என்பதினின்றும் சில காட்சிகளும், சகுந்தலை நாடகத்தைத் தோற்றக் காட்சிகளாகவும் ஆடினோம். தமிழில் மிகுந்த விற்பத்தியுடைய அச்சீமான் நாடகத்தின் முடிவில், மேடையின் பேரில் வந்து, ஆக்டர்களையெல்லாம் மிகவும் புகழ்ந்து, எங்கள் சபையை இலங்கைக்கு வரும்படியாகக் கோரினார்.

அன்றியும் இவ்வருஷ முதலில் சென்னையின் பழைய கவர்னராகிய லார்ட் வென்லாக் என்பவர், சென்னைக்கு மறுபடியும் வர, சென்னைவாசிகள் ராவ்பகதூர் அனந்தாச் சார்லு தோட்டத்தில் அவருக்கு ஒரு உபசார விருந்தளிக்க, அச்சமயம் அக்கமிட்டியார் வேண்டுகோளின்படி எங்கள் சபையார், ‘விரும்பிய விதமே’ நாடகத்திலிருந்து சில காட்சிகளையாடி, நந்தனார் சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். நாடக முடிவில், எங்கள் சபையின் பேட்ரன் (Patron) ஆகவிருந்த சர். சுப்பிரமணிய ஐயர் அவர்கள், ஆக்டர்களாகிய எங்களையெல்லாம் இன்னின்னாரென லார்ட் வென்லாக்குக்குத் தெரியப்படுத்தினார். அச்சமயம் என்னைப் பற்றியும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை நான் தமிழில் அமைத்ததைப் பற்றியும் அவரிடம் புகழ்ந்து பேசினார். அப்போது லார்ட் வென்லாக் குடன் நான் சம்பாஷித்தபொழுது நடந்த ஒரு சிறு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது; எங்கள் சபையைப் பற்றிப் பலவிஷயங்கள் கேட்டு வரும்பொழுது, முடிவில், ‘உங்கள் சபையில் எத்தனை அங்கத்தினர் இருக்கிறார்கள்?’ என்று (இங்கிலீஷில்) கேட்டார். அதற்கு நான் ‘முன்னூறு பெயரிருக்கிறோம்!’ என்று பதில் சொல்ல; ஒரு நாடக சபைக்கு இத்தனை அங்கத்தினரா?’ என்று ஆச்சர்யப் பட்டவராய், “முன்னூறு மெம்பர்களா? முன்னூறு மெம்பர்களா?’ என்று பன்னிக் கேட்டார். சில வருஷங்களுக்குப்