பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

352


வராயிருந்தபடியால், இதை நான் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இக்கொள்கையினின்றும் எனதாருயிர் நண்பர் எங்கள் சபையைச் சேர்ந்த 1895ஆம் வருடம் முதல் 1923ஆம் வருஷம் அவர் தேகவியோகமான வரையில் மாறவில்லை என்று எனது நண்பர்கள் அனைவரும் அறிந்த விஷயமே. இந்நாடகத்தில் மோகினியின் சகோதரர்களாக, கிரிதரன், ஆர்வராகன் என்னும் இரண்டு பாத்திரங்கள் எங்கள் சபையைப் புதிதாய்ச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரும், ம. ராமகிருஷ்ண ஐயரும் எடுத்துக்கொண்டு மிகவும் நன்றாய் நடித்தார்கள். இவர்களிருவரையும் பற்றி இங்குச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள். இருவரும் இதற்கு முன்பாக ஏதோ ஒரு சபையில் கொஞ்சம் ஆடிப் பழகினவர்கள். இருவரும் எங்கள் சபையில் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தற்காலம் ராமகிருஷ்ண ஐயர் சற்றுப் பருமனாக இருந்தபோதிலும், அக்காலத்தில் வடிவேலு நாயகரைப் போலவே ஒல்லியாயிருந்தார். இவர்களிருவரும் ஏறக்குறைய ரங்கவடிவேலுவின் உயரமிருந்தபடியால், இம்மூவரும், அண்ணன், தம்பி, தங்கையாக நடித்தது அழகாயிருந்தது. இவர்களிருவரும் இந்த ஆண் வேடங்களில் நன்றாய் நடித்த போதிலும் இவர்கள் ஸ்திரீவேடங்களுக்கே ஏற்றவர்கள் என்று கண்டவனாய், பெரும்பாலும் இவர்களுக்கு ஸ்திரீ வேடமே கொடுத்து வந்தேன். இவர்களிருரிடமும் சில முக்கியமான நற்குணங்கள் இருந்தன. இருவரும் எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ளச் சொன்ன போதிலும், மனம் கோணாது எடுத்துக்கொள்வார்கள்; அதுதான் வேண்டும், இதுதான் வேண்டும் என்று கண்டக்டர்களுக்குச் சிரமம் கொடுப்பதில்லை; இருவர்களும் தங்கள் பாடங்களைச் சரியாகச் சடுதியில் படித்து விடுவார்கள்; இருவருக்கும் நல்ல ஞாபகசக்தியுண்டு; நாடக மேடையின்மீது கைசரக்கு அதிகமாக உபயோகிக்க மாட்டார்கள்; இது ஆக்டர்களுக் குரிய ஒரு முக்கியமான குணமாம். அன்றியும் இவ்விருவர் களும், ஒத்திகைகளுக்குச் சரியாக வந்து தங்கள் பாடங்களை ஒப்புவிப்பார்கள். இத்தனைப் பொருத்தங்கள் இவ்விரு வருக்கும் இருந்த போதிலும், சில - வித்தியாசங்களும் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, வடிவேலு நாயகர்