பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

353


நன்றாய்ப் பாடுவார்; ராமகிருஷ்ண ஐயருக்கும் சங்கீதத்திற்கும், எயிரோபிளேனி (aeroplane) னாலும் ஒரு நாளில் கடக்கக் கூடாத தூரம்! ராமகிருஷ்ண ஐயர் சிவப்பாயிருப்பார்; வடிவேலு நாயகர் கருநிறமுடையவர். கருநிறமுடையவராயினும், ஸ்திரீ வேஷம் தரித்தால் அழகாய்த் தோற்றுவார்.

வடிவேலு நாயகர், அ. கிருஷ்ணசாமி ஐயர் கொஞ்சம் வயோதிகரான பிறகு, அவர் ஆடிவந்த பாகங்களில் அநேகம் ஆடியிருக்கிறார். லீலாவதி, சந்தியாவளி, சௌமாலினி, ரத்னாங்கி முதலிய முக்கியமான ஸ்திரீ வேடங்களில், அவருக்குப் பிறகு, மிகவும் நன்றாய் நடித்துப் பெயரெடுத்திருக்கிறார். தற்காலம் லீலாவதி வேஷத்தில் இவருக்கு நிகரில்லையென்றே நான் கூறவேண்டும். கிருஷ்ணசாமி ஐயரைப்போல் அவ்வளவு திவ்யமான சாரீரமுடையவராயில்லா விட்டாலும், குறைவில்லாச் சாதகத்தினால் தன் குரலைச் சரிப்படுத்தி, சபையோர் மெச்சும்படியாகப் பாடுபவர். மேற்குறித்த நாடகப் பாத்திரங்களன்றி, எனது மனோஹரன் நாடகத்தில் இவருக்குச் சமானமாக வசந்தசேனையாக யாரும் நடித்ததிலர் என்று நான் உறுதியாய்க்கூறக் கூடும். அன்றியும் சோக பாகங்களில், கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, இவர்தான் தற்காலம் சிறந்த ஆக்டர் என்று சொல்ல வேண்டும். தற்காலம் ஹரிச்சந்திர நாடகம் எங்கள் சபையில் போடும்போதெல்லாம் இவர்தான் சந்திரமதியாக வெகு விமரிசையாக நடித்து வருகிறார். அன்றியும் கிருஷ்ணசாமி ஐயரைப் போல் தெலுங்கு நாடகங்களிலும் சிலவற்றுள் இவர் முக்கிய ஸ்திரீ வேஷம் பூண்டிருக்கிறார். மேலும் இவரிடமுள்ள இன்னொரு முக்கியமான சிறப்பு. என்னவென்றால், அழகிய ராஜஸ் திரீகள் வேடம் பூணுவதை விட்டுச் சாதாரண ஸ்திரீகளின் வேஷம் பூணுவதிலும் இவர் மிகவும் சமர்த்தர். சிறுத் தொண்டர் நாடகத்தில் சந்தன நங்கையாகவும், புத்த சரித்திரத்தில் கிருசகௌதமியாகவும், சபாபதியில் சபாபதி முதலியாரின் தாயாராகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் பெயர் பெற்றிருக்கிறார். எந்த வேடத்தில் வந்தாலும் சரிகைப் புடவையும், ரவை அட்டிகையும் கட்டிக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் சில ஆக்டர்களைப் போலல்லாமல், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடியே