பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

நாடக மேடை நினைவுகள்


ஆடையாபரணங்களை அணிவார். தெற்கத்திய ஸ்திரீயாக வந்தாலும், இடைச்சியாக வந்தாலும் தாய்க்கிழ வியாக வந்தாலும், கிறிஸ்தவப் பெண்ணாக வந்தாலும் தத்ரூபமாயிருக்கும்.

இவர் தமிழ் நன்றாய்க் கற்றுணர்ந்தவர்; தமிழில் வள்ளி மணம் என்கிற ஒரு நாடகத்தையும் எழுதியிருக்கிறார். அது எங்கள் சபையோரால் ஒரு முறை ஆடவும் பட்டிருக்கிறது. அன்றியும் தமிழ்ப் பாட்டுகள் எழுதுவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர். தனக்கு வேண்டிய வர்ணமெட்டுகளிலெல்லாம் தானாகப் பாட்டுகள் கட்டிக்கொள்வார்; பிறருக்கும் கட்டிக் கொடுப்பார்.

இவரது நண்பராகிய ராமகிருஷ்ண ஐயர் சில சமயங்களில் வசந்தசேனை, ரத்னாவளி முதலிய உயர்குல ஸ்திரீ வேடங்கள் தரித்தபோதிலும், இவர் முக்கியமாக நாடக மேடையில் பெயர் பெற்றது “சில்லர” வேஷங்கள் என்று சொல்லப்பட்ட தாழ்குலத்து ஸ்திரீ வேடங்களிலேயாம். வடிவேலு நாயகரைப் போலவே இவரும் இப்படிப்பட்ட வேஷங்கள் தரிக்கும்பொழுது, அவ் வேஷங்களுக்குத் தக்கபடியே ஆடை ஆபரணங்கள் அணிவார். இவர் வண்ணாத்தியாக வேடம் பூண்டால், அச்சம் வண்ணாத்தியைப் போலவே நடிப்பார்; ஆதிதிராவிட ஸ்திரீயாக வேடம் பூண்டால் எல்லோரும் ஆதி திராவிட மாதுதான் என்று சொல்வார்கள்; குயத்தியாக வேடம் பூண்டால், வாஸ்தவமாகிய ஸ்திரீகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமாம். எந்த வேடம் பூண்டாலும் அதற்கிசைய நடிப்பதுதான் மேன்மை - என்று அர்த்தம் கொள்ளும்படியாக ஒரு ஆங்கிலக் கவி எழுதியிருக்கிறார். அதற்கிசைய நடிப்பவர் இவராவர். ‘பொன் விலங்குகள்’ என்னும் எனது நாடகத்தில் மங்கைத் தாயாகவும், இடைச்சுவர் இருபுறமும் என்னும் தமிழ் நாடகத்தில் அம்மாயி என்னும் வேலைக்காரியாகவும் இவர் நடித்தது சபையோரால் மெச்சப்பட்டதை நான் மறக்கற்பாலதன்று. இவ்வாறு தாழ்குல ஸ்திரீகள் வேஷங்களில் பெயர் பெற்றதும், அரிச்சந்திர விலாசத்தில் காலகண்டியாகவோ அல்லது நந்தனார் சரித்திரத்தில் வேதியர் மனைவியாகவேர், பிராம்மண ஸ்திரீயாக வரும் பொழுது அசல் பிராமண