பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

355


ஸ்திரீயைப்போலவே இருப்பார். இது நாடக மேடையில் ஒரு மிகவும் மெச்சத்தக்க குணமாம்.

இவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத விரும்புகிறேன். இவர் என்னிடம், “என்ன வாத்தியார்! எப்பொழுது பார்த்தாலும், மங்கைத்தாய் வேஷமும், அலமேலு வேஷமும்தான் எனக்குக் கொடுக்கிறீர்கள்? பெரிய நாடகப் பாத்திரமாக நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஏதாவது ஒன்றைக் கொடுத்து, என்னைப் பாருங்கள்!” என்று பன்முறை கேட்டிருந்தார். அதன்மீது ஒரு முறை மனோஹரன் நாடகம் எங்கள் சபையார் ஆடத் தீர்மானித்திருந்தபொழுது இவருக்குப் பத்மாவதி பாத்திரம் கொடுத்தேன். மற்ற ஆக்டர்களெல்லாம் இவரால் பத்மாவதி சரியாக ஆட முடியாதென்று கூறினர்; ஆயினும் பார்ப்போம் என்று, என்னாலியன்ற அளவு அவருக்கு அப்பாத்திரத்தை இப்படி இப்படி ஆட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தேன்; அவரும் மிகுந்த சிரத்தையெடுத்துக் கொண்டு கற்று வந்தார். இவருக்கோ கிருஷ்ணசாமி ஐயரைப் போல் பாடத் தெரியாது; பத்மநாபராவைப் போல் கம்பீரமான உருவமும் கிடையாது; மிகவும் குட்டையாக உருவம் உடையவர். இப்படி இருந்தும் நாடக தினம், பத்மாவதியாக நடித்தபொழுது முன்பு ஏளனம் செய்த அநேகர், இவ்வளவு நன்றாக நடிப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். எனக்கும் இவர் என்னுடன் நடித்தது திருப்திகரமாயிருந்தது. இதை இவ்விடம் ஏன் எடுத்துக் கூறுகிறேன் என்றால், நம்மால் அசாத்தியமான காரியமான போதிலும், மனமார முயற்சி செய்தால் அதன் பலன் நமக்குக் கிட்டாமற் போகாது என்பதுதாம்; இதைப்பற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை எனது நண்பர்கள் கவனிப்பார்களாக.

அன்றியும் இவ்வருஷம் நாங்கள் நடத்திய இந்தச் சிம்ஹௗநாதன் நாடகத்தில் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், டி. வி. கோபாலசாமி முதலியார் என்பார் முதன் முறை வேடம் தரித்தனர். இவர் தற்காலம் சென்னை கவர்ன்மெண்ட் மந்திரிகளில் ஒருவராயிருக்கும் ஹானரபில் ராஜன் என்பவரின் மாமனார்; எனக்கு இது முதல் தன்