பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/372

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

357


செல்வோம். இத்தகைய நண்பனைச் சில வருடங்களுக்குள் இழந்தது எனது பூர்வபாபவி பாகம் என்றே கருதுகிறேன்.

இந் நாடகத்தில் டாக்டர் டி. ஸ்ரீவாசராகவாச்சாரி ஈயாகாமன் (lachimo) வேடம் பூண்டனர். இவர் 12 வருடங்களுக்கு முன் இரண்டு நண்பர்கள் எனும் நாடகத்தில் கமலினி வேஷம் தரித்த பிறகு, இடைக் காலத்தில் எங்கள் சபையைவிட்டு நீங்கியிருந்து, மறுபடியும் இச் சமயம் வந்து சேர்ந்தார். இந் நாடகத்தில் நடித்த மற்ற ஆக்டர்களைப்பற்றி நான் இங்கெழுதத்தக்க விசேஷம் எனக்கொன்றும் ஞாபகமில்லை .

இந் நாடகமானது, இச்சமயம், சீக்கிரம் ஆடவேண்டுமென்று ஒருவாறு அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பிறகு சாவகாசமாக முற்றிலும் திருத்தி எழுதி 1914ஆம் வருஷம்தான் இதை அச்சிட்டேன். அச்சிடும் பொழுது, ஷேக்ஸ்பியர் காலத்தில் அநுசிதமாக மதிக்கப் படாவிட்டாலும், தற்காலம் அவ்வாறு மதிக்கப்படும் என்று நான் எண்ணிய சில வாக்கியங்களை மாற்றியுள்ளேன். அன்றியும் இதில் 5ஆம் அங்கத்தில், பாசதாமனது காட்சியில், அம் மகா நாடகக் கவி எழுதாது மற்றவர்களால் கோர்க்கப்பட்டது என்று அறிஞர்களால் மதிக்கப்படும் பாகத்தையெல்லாம், நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகத்தில் அகற்றியுள்ளேன்.

அந்நாடகமானது, எங்கள் சபையால் இரண்டு மூன்று முறைதான் ஆடப்பட்டது; இலங்கை சுபோத விலாச சபையாரால் நான்கைந்து முறை ஆடப்பட்டிருக்கிறது; மற்றச் சபையார் இதை எக்காரணத்தினாலோ அதிகமாக ஆடவில்லை .

இந்தச் சிம்ஹளநாதன் அன்றி, இவ்வருஷம் எங்கள் சபையார் நடித்த எனது மற்றொரு நாடகம் “வேதாள உலகம்” என்பதாம். இந்நாடகத்தை இதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே நான் எழுதி முடித்தபோதிலும் இவ்வருஷம்தான் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இவ்வாறு இந்நாடகம் ஒரு வருஷமாய் ஆடாமல் நின்றதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. இந்நாடகத்தில் கதாநாயகன் ராஜஸிம்ஹன் எனும் அரசகுமாரனாயினும், அவனைவிட முக்கியமான பாத்திரம் ‘தத்தன்’ என்னும் அவனுடைய