பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

361


முதலியார், கே. வரதாசாரியார் முதலியோர். இன்னும் நான் மேலே குறித்தபடி இதர சபைகளில் அநேகர் இதை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். இதை நடிக்க விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். இந்தப் பாகத்தை நடிக்க விரும்புவோர் எஸ். ராஜகணபதி முதலியாரைப் போல் பெரும் உடலை உடையவராயிருத்தல் வேண்டும்; அல்லது அப்படி இயற்கையில் இல்லாவிட்டால் செயற்கையினாலாவது பெருத்த உடலை உடையவராகத் தோன்றவேண்டும். எங்கள் சபையில் எம். துரைசாமி ஐயங்கார் இதை நடித்தபொழுது, அவர் தேகம் அதிக ஸ்தூலமாயில்லாதபடியால், அவருக்குச் சற்று ஸ்தூல தேகமுடையவராய் நாடக மேடையில் தோன்றும் படியாக, பஞ்சு வைத்து மெத்தையைப் போன்ற உள்ளே தரிக்கும்படியான சட்டை, நிஜார் எல்லாம் தைத்து அதன்மீது தொப்பைக்காக ஓர் ஏற்பாடு செய்து, அதன்மீது அவர் அணிய வேண்டிய உடையை அணியச் செய்தோம். மெல்லிய தேகமுடையவர்கள் இவ்வாறு செய்தாலொழிய இப்பாத்திரத்தை ஆடுவது ரசாபாசமாம். இதற்கோர் உதாரணத்தை என் கண்ணாரக் கண்டேன். ஒரு சபையார் (அவர்களின் பெயரை இங்கெழுத எனக்கிஷ்டமில்லை) இந்நாடகத்தை நடித்த பொழுது, என்னை வரும்படியாகக் கேட்டிருந்தனர்; அதன்படி நான் போய்ப் பார்க்க, முதல் காட்சியானவுடன்; என் பக்கத்திலிருந்த நண்பரை, இந்தக் காட்சியில் ஆடியவர்களில் ‘யார் தத்தன், யார் ராஜசிம்ஹன்?’ என்று வேடிக்கையாக் கேட்டேன்; ஏனெனில் தத்தன் இருக்கவேண்டியதைபோல் ராஜசிம்ஹன் வேஷம் பூண்டவர், மிகவும் பெருத்த சரீரமும் வயிரும் உடையவராயிருந்தார்; தத்தன் வேடம் பூண்டவர், உடலில் எலும்புகளெல்லாம் வெளியில் தோன்றக்கூடிய ஸ்திதியிலிருந்தார்! இந்நாடகத்தை ஆட விரும்பும் ஆக்டர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார்களாக. அன்றியும் ஸ்தூல தேகமில்லாதவர் இந்தத் தத்தன் வேடம் பூணுவதென்றால், வயிற்றிற்கு மாத்திரம் தொப்பைப்யை போல், துணியைக் கட்டிக் கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன். இதைப் பார்க்கும் பொழுது சூனாவயறு என்னும் வியாதியையுடைவன் போல் தோன்றுகிறது; ஆகவே மெல்லிய