பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

நாடக மேடை நினைவுகள்


எழுதினேன். இதையும் சென்ற வருஷம் நடத்திய ‘சபாபதி காட்சியையும் சேர்த்து “சபாபதி” முதல் பாகம் என்று அச்சிட்டிருக்கிறேன்.

பத்தொன்பதாம் அத்தியாயம்

னி 1909ஆம் வருஷத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபை அங்கத்தினராயிருந்த பி.எஸ். துரைசாமி ஐயங்காரால் எழுதப்பட்ட ‘ஜ்வலிதா - ரமணன்’ என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதிய, “ரோமியோ - ஜூலியட்” (Romeo-Juliet) என்னும் நாடகத்தின் மொழி பெயர்ப்பாம். இவர் இதற்கப்புறம் யுத்த லோலன், பிரஹ்லாதன், வள்ளித் திருமணம் முதலிய நாடகங்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். இவர் நாடகங்களை எழுதுவதுமன்றி, அவைகளில் நடிக்கும் திறமையும் வாய்ந்தவர். அப்படியிருந்தும் தனது நாடகத்தில் என்னைக் கதாநாயகனான ரமணன் (Romeo) பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கேட்க, நானும் இசைந்தேன். அதன் பேரில் ஜ்வலிதை (Juliet) பாத்திரம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவுக்கே கொடுக்கப்பட்டது. இந் நாடகம் நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்த பொழுது, முக்கியமான ஒரு சமாச்சாரம்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக நான் மேடையின் மீது தோன்றும்பொழுது, ஏதாவது மிகுந்த முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் சபையோர் கரகோஷம் செய்வார்கள்; இந்நாடகத்தில் நான் முதற் காட்சியில் தோன்றியவுடன் கரகோஷம் செய்யவே, ‘இதென்ன விந்தை! இப்படி எப்பொழுதும் நடந்ததில்லையே! இதற்குக் காரணம் என்ன’ வென்று எனது நண்பர்களைக் கேட்க அவர்கள், “இதுவரையில் மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடுவதில்லை யென்று தீர்மானித்த நீ, இதில் அத் தீர்மானத்தினின்றும் பிறழும்படி நேரிட்டதே எனக் கை கொட்டினோம்!” என்று