பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/382

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

367


கற்று ஆடியதை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் என் உள்ளத்து உண்மை உணர்ச்சியை நான் உரைக்க வேண்டின், அவரைப்போல், விநயத்துடன் அழகுற ஆடும்படியானவர்களைக் கண்டிலன் என்றே கூற வேண்டும். இச்சபையில் இவருக்குச் சற்று அருகில் வந்தவர், கே. நாகரத்தினம் ஐயரே என்பது என் துணிபு. நாட்டியம் ஆடுவதென்றால் அதற்குரிய அங்கலட்சணங்களெல்லாம் அமைந்திருக்க வேண்டும்; தேகம் அதி ஸ்தூலமாயுமிருக்கக்கூடாது, அதிக மெலிவடைந்துமிருக்கலாகாது; அதிக உயரமாயும் இருக்கலாகாது; அதிகக் குட்டையாயு மிருக்கலாகாது; முகத்தில் மிகுந்த சௌந்தர்யமிருக்க வேண்டும்; ஹஸ்தங்கள் பிடிப்பதில் அழகுறச் செய்ய வேண்டும்; பாதங்களினால் தாளம் போடும் போது துமுக்குவது போலிருக்கலாகாது; இவைகளெல்லாம் ஒருங்கு சேர்வது கடினம் போலும்.

எனதுயிர் நண்பர் அன்று ஆடியதைக் கண்ட அநேகர் கவர்னர் ஜெனரலுக்காக, அதைச் சீக்கிரம் முடிக்க வேண்டி வந்தது. அதை இன்னும் சவிஸ்தாரமாகக் காண வேண்டு மென்று கேட்டுக்கொள்ள, தியாகராய செட்டியார், மறு நாளும் கிளப்பில் ஏற்படுத்திய அரங்கத்தில், இதைப் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் பேரில், “மாதர் மகாஜன சபா” என்று ஒரு சிறு காட்சியை ஏற்படுத்தி, அதில் சி. ரங்கவடிவேலு மறுநாளும் நர்த்தனம் செய்யும்படி, ஏற்படுத்தினோம். அதனுடன்கூட “சபாபதி”யிலிருந்து ஒரு காட்சியும் ஆடினோம்.

முன்னால் இங்கு நான் மனோஹரனாக நடித்த பொழுது நேரிட்ட ஓர் அசந்தர்ப்பத்தை எழுத விரும்புகிறேன். இக் காட்சியில் நான் விரைந்து வரவேண்டியிருக்கிறது. அப்படி விரைந்து வரும்பொழுது, நான் அணிந்திருந்த பீதாம்பரத்தின் மூல கச்சம் அவிழ்ந்து விட்டது. அதை அறிந்தவனாய் ஒரு கரத்தால் கீழே அவிழ்ந்து விழாமலிருக்க அதைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்த ஆசனத்தில் பத்மாவதிக்கும் விஜயாளுக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டேன். பிறகு நான் விஜயாளுடன் எழுந்திருந்து பேச வேண்டிய வார்த்தைகளை எல்லாம் அவ்விடமே உட்கார்ந்து பேசி முடித்தேன். இதைக் கண்டு கோபித்து எனதுயிர் நண்பர்