பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

369


படியால் அவ் வேலையைக் கவனிக்கக்கூடாமற் போகவே, பொதுவாகக் கண்டக்டர் என்கிற பெயரை மாற்றி, தமிழ் கண்டக்டர், தெலுங்கு கண்டக்டர் என்று இரு பிரிவாக்கப்பட்டது. அதன்பேரில் பொதுச் சபைக் கூட்டத்தில் என்னை தமிழ் கண்டக்டராக நியமித்தார்கள்.

இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பின்புறம் இருக்கும், நாங்கள் டென்னிஸ் விளையாடும் இடத்தில், ஒரு சிறு மேடை ஏற்படுத்தி, அதில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் நாடகங்களினின்றும், என்னால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சில காட்சிகளை ஆடினோம்.

இவ்வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி யென்னவென்றால், இதுவரையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில், மேற்குப்புறமுள்ள ஒரு சிறு அறையில் இருந்த நாங்கள், விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இப்பொழுது இருக்கும் இடத்திற்கு நாங்கள் குடி புகுந்ததேயாம். இவ் வருஷம் செப்டம்பர் மாதம் வரையில் அவ்விடம் மர்க்கென்டைல் அண்டு மெரீன் கிளப் (Mercantile & Marine Club) என்று ஒரு கிளப் இருந்தது; அந்த கிளப் க்ஷணித்துப் போய், அவர்களிருந்த இடத்தை ஒழித்து விட்டனர். அதன் பேரில் விக்டோரியா பப்ளிக் ஹால் டிரஸ்டிகளின் அனுமதியின் பேரில், அவ்விடத்தை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 125 வாடகைக்குப் பேசிக்கொண்டு குடி புகுந்தோம். இப்படி நாங்கள் அவ்விடம் போகப்போகிறோம் என்கிற சங்கதியைக் கேள்வியுற்ற காலஞ்சென்ற சர். வி. சி. தேசிகாச்சாரியார் அவர்கள் என்னை அழைத்து, “என்ன சம்பந்த முதலியார், இது வரையில் அவ்விடமிருந்த” அநேக கிளப்புகள் முன்னுக்கு வரவில்லையே! உங்கள் சபை இதுவரையில் விருத்தியடைந்து கொண்டே வந்திருக்கிறதே, நீங்கள் அவ்விடம் போனால் எப்படியிருக்குமோ?” என்று சொன்னார். அவர் எங்கள் சபையின் நன்மையையே கோரி இவ்வாறு எச்சரித்தார் என்பதற்கு ஐயமில்லை. அதன்மீது நான், “எக்காரியத்தை நான் தொடங்கினாலும், ஸ்வாமியின் பாரம் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி ஆரம்பிக்கிறேன். அவர் எங்கள் சபையைக் காப்பாற்றுவார் என்று