பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/385

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

நாடக மேடை நினைவுகள்


நம்புகிறேன்” என்று விடை பகர்ந்தேன். ஆயினும் நாங்கள் இவ்வாறு இடம் பெயர்ந்தது இடையூறுகள் இன்றியன்று; பல ஆட்சேபங்கள் நேரிட்டன. முக்கியமாக, இங்குச் செல்வதென்றால் 125 ரூபாய் மாதம் வாடகை கொடுக்க வேண்டுமே என்பதாம். இதுவரையில் கேவலம் நாடக சபையாயிருந்ததை, ஒரு கிளப்பாக ஆக்க வேண்டியிருந்த படியால் பில்லியர்ட்ஸ் (Billiards) முதலிய ஆட்டங் களுக்குரிய செலவையும் ஏற்க வேண்டி வந்தபடியால், இதுவரையில், அங்கத்தினருக்கு மாதச் சந்தாக் கட்டணம் 8 அணாவாகவிருத்ததை ஒரு ரூபாயாக அதிகப்படுத்த வேண்டியதாயிற்று. இதற்காகச் சபையின் பொது ஜனக் கூட்டம் கூடி, அவர்கள் சம்மதத்தைப் பெற வேண்டியதாயிருந்தது. இதற்குப் பலர் ஆட்சேபித்தனர். இவர்களுடைய ஆட்சேபணையையெல்லாம் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, மெல்லச் சமாதானப்படுத்தினோம். ஆயினும், அச் சமயம் ஆட்சேபித்தவர்களுள் ஒருவராகிய, பி.எஸ். துரைசாமி ஐயங்கார் அவர்கள் கூறிய வார்த்தை மாத்திரம் எனக்கு மனத்தில் மிகவும் உறுத்தியது. அதை இங்கு நான் எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் அன்றைத் தினம் பொதுக்கூட்டத்தில் கூறிய வார்த்தைகளாவது: “இதுவரை யில் நாடக சபையாயிருந்த இதை ஒரு கிளப்பாக மாற்றுவீர்களானால், பிறகு, வெறுங்கிளப்பாக மாறிவிடுமேயொழிய, நாடக சபை என்கிற பெயர் அழிந்துவிடும். இப்பொழுதே சொன்னேன்!” என்பதேயாம். இதை எனது பழைய நண்பர்களும் நானும் இந்த இருபத்தொரு வருடங்களாகக் கவனித்து அப்படிக் கெடுதி ஒன்றும் நேரிடா வண்ணம், எங்கள் - சபையைக் காத்து வந்தோம். இனிச் சபையின் பாரத்தைத் தோள் மீது ஏற்றுக்கொண்ட எங்கள் சபையின் இளைய அங்கத்தினரும், அப்படியே சுகுண விலாச சபை, முக்கியமாக நாடக சபையென்னும் பெயர் அழியாது நீடூழிக் காலம் காப்பார்களாக!

இவ்வாறு சபையை ஒரு கிளப்பாக மாற்ற வேண்டிய தற்காக, பில்லியர்ட் டேபில் முதலிய செலவுகளன்றி, மின்சார விளக்குகள் போடுவதற்காகவும், நாற்காலிகள் முதலிய சாமான்கள் வாங்குவதற்காகவும், அதிகச் செலவு