பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

நாடக மேடை நினைவுகள்


வருமாறு: சென்ற வருஷத்தில் கடைசியில், எங்கள் சபையார் தற்காலத் தமிழ் நாடக மேடையில், இப்படிப்பட்ட நாடகங் களில்லாத குறையைத் தீர்க்கவேண்டுமென்று தீர்மானித்து, இத்தகைய நாடகங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழ் நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் (Medel), தெலுங்கு நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். அதற்காகச் சில நிபந்தனைகளும் ஏற்படுத்தினர். அவையாவன: கதை புதிதாக இருக்கவேண்டும்; தற்காலத் திய ஜனசமூகத்தைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும்; நாடகாசிரியன் பரிசோதகர்கள் தீர்மானிக்கும் வரையில் தன் பெயரை வெளியிடக் கூடாது; மற்றவர்கள் உதவியைக் கொண்டு எழுதலாகாது. தானாக எழுதியதாயிருக்க வேண்டும் என்பவுையாம். சபையிலுள்ள அங்கத்தினர் மாத்திரமின்றி, மற்றவர்களும் இதற்குப் பிரயத்தனப்படலாம் என்றும் தெரிவித்தனர். அதன் மீதுதான் இப் ‘பொன் விலங்குகள்’ என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன்.

எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் இதனுடன் மொத்தம் 11 நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளையெல்லாம் பரீட்சித்து எதற்குப் பரிசு கொடுக்கவேண்டு மென்று தீர்மானிப்பதற்காக, காலஞ்சென்ற பச்சையப்பன் கலாசாலையில் தமிழ் வித்வானாக இருந்த, தி. செல்வகேசவராய முதலியார் எம்.ஏ.ஒன்று; திவான் பகதூர் மாசிலாமணிப் பிள்ளை அவர்கள் இரண்டு; திவான்பகதூர் எம்.எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் மூன்று; இவர்களை ஏற்படுத்தினார்கள். இம் மூவரும், அப் பதினோரு நாடகங்களையும் பரிசோதித்துப் பார்த்து, “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்திற்குத்தான் பரிசளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்த பிறகுதான், இதை எழுதினவன் நான் என்று, அவர்கள் உட்பட, எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது; இம்மாதிரியே தெலுங்கில், வே. வெங்கடேச சாஸ்திரியார் எழுதிய, “உபயப்பிரஷ்டம்” என்னும் தெலுங்கு நாடகத்திற்கு, தெலுங்குப் பரிசு கொடுக்கப்பட்டது.

இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தின் கதையைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; என் நண்பர்கள் பெரும்பாலும் இதைப் படித்திருப்பார்கள்