பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

373


என்று நம்புகிறேன். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் பாட்டென்பதே கிடையாது. கதா நாயகியாகிய பங்கஜவல்லி, சங்கீதமாகப் பாடும் ஒரு விருத்தம் தவிர, சாதாரணமாக நாடகங்களில் பாடும் பாட்டுகள் ஒன்றேனும் கிடையாது. இதனால், இதை மேடையில் நடித்தால் ஜனங்களுக்குச் சந்தோஷத்தையுண்டு பண்ணுமோ என்று எங்கள் அங்கத்தினர் பலர் ஐயமுற்றனர். ஆயினும் இவ்வருஷம் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இதை ஆடினபொழுது, அந்த ஐயமெல்லாம் நீங்கியது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஜனங்கள் நிறைந்திருந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிறபடி சற்றேறக்குறைய நானூறு ரூபாய் வசூலாயிற்று; வசூல் அதிகமானது பெரிதல்ல, வந்தவர்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதெனக் கூறினதுதான் எனக்கு முக்கியம். இதைப்பற்றி நானும் கொஞ்சம் பயந்து கொண்டுதானிருந்தேன்; ஏனெனில், தொன்றுதொட்டு இந்நாட்டில் நாடகம் என்றால், பாட்டுகளில்லாமல் கிடையாது. பூர்வகாலத்தில் நாடகம் முழுவதும், வெறும் பாட்டுகளாகவே இருந்ததென்பதற்கையமில்லை; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வசனங்கள் நுழைந்தபோதிலும்; பெரும்பாலும் தற்காலத்திய நாடகங்களும் பாட்டு மயமாயிருக்கின்றனவென்பது எல்லோரும் அறிந்த விஷயமே. சங்கீதமல்லாத நாடகமென்றால் சந்திரனில்லாத வானம் என்று எங்கு வெறுக்கிறார்களோ என்று நானும் பயந்தவனே. ஆயினும் அன்றைத் தினம் வந்திருந்த திரளான ஜனங்கள், ஆதிமுதல் அந்தம் வரையில் ஆங்காங்கு கரகோஷத்துடன் நாடகக் கதையைக் கவனித்து வந்தது எனக்கு அப் பயத்தைப் போக்கி, தென் இந்தியாவிலும், ஐரோப்பாக் கண்டத்திலிருப்பது போல், இத்தகைய நாடகங்களுக்கு இடமுண்டு என்று எண்ணும்படி செய்தது. இந்த ஊக்கத்தைக் கொண்டுதான், பிறகு நான், ‘விஜயரங்கம்’, ‘தாசிப்பெண்’, ‘உண்மையான சகோதரன்’ முதலிய ஜனசமூக நாடகங்களை இயற்றியுள்ளேன். ஆயினும் நாடகம் என்றால் சங்கீதம் அதற்கு இன்றியமையாதது என்னும் எண்ணம், நமது தென் இந்தியாவில் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. அநேக நூற்றாண்டுகளாய் வேரூன்றிய எண்ணத்தை அத்தனை