பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

377


வருடங்களாக நான் நாடக மேடையில் பழகனவனாயினும், இப்போதும் ஏதாவது புதிதாக நடிப்பதென்றால், அவருடைய புத்திமதிகளைக் கேட்பேன். ‘அமலாதித்யன்’ ‘புத்தர்’ முதலிய கடினமான நாடகப் பாத்திரங்களை நான் ஒத்திகை செய்தபோதெல்லாம், இவர் முன்பாக நடித்துக் காட்டி, இவரது அபிப்பிராயங்களைக் கேட்டு, என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறேன். இவரை மற்ற ஆக்டர்கள் ஆஸ்ரயித்து இவரது புத்திமதிகளால் அபிவிருத்தி அடையாதது அவர்களுடைய துர்அதிர்ஷ்டம் என்றே நான் சொல்வேன். இவருக்கு நாடகக் கம்பெனியிலும் மற்றக் கம்பெனிகளிலும் உள்ள ஆசையினால், இவரை அண்டிக் கேட்டவர்களுக்கு, எப்பொழுதும் உதவாமற் போனதில்லை. ஆற்றில் ஜலம் ஏராளமாகவும் நிர்மலமாகவும் ஓடும்பொழுது அதை வாரி அருந்தாமற் போனால் யார் தவறு? ஆறு தானாகக் கேட்குமோ, என்னிடமுள்ள ஜலத்தை நீங்கள் ஏன் அருந்தவில்லையென்று?

இவரிடம் இன்னொரு விசேஷமுண்டு. இவருக்குச் சங்கீதம் என்பது கொஞ்சமும் தெரியாது; சங்கீத ஞானம் சற்றுமில்லை; அதாவது ராகங்களைப் பகுத்தறியுஞ் சக்தி கொஞ்சமுமில்லை; ஆயினும் நாடக மேடையில் நடிகர்கள், இப்படி இப்படிப் பாடினால் நன்றாயிருக்குமென்று மிகுந்த புத்தி சாதுர்யமாகச் சொல்லிக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர்; சங்கீதத்தில் நிபுணர்களுக்கும் இவர் யுக்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஓர் உதாரணத்தை இங்கெடுத் தெழுதுகிறேன்; நந்தனார் சரித்திரத்தில், எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், நந்தனாக நடிப்பதில் எனக்கு நிகரில்லையென்று பெயர் பெற்றிருக்கிறார்; இவர் சங்கீதத்தில் மிகவும் பழகித் தேர்ச்சி பெற்றவர்; ராகக்கியானத் திலும் தாளக்கியானத்திலும் எங்கள் சபையில் எல்லோரையும் விடச் சிறந்தவர் என்றே கூற வேண்டும். இப்படியிருந்தும், நந்தனார் சரித்திர நாடகத்தில், “பிறவிப்பிணி தீர மருந்தொன்றுண்டு பேரின்பமன்றுளே” என்னும் பாட்டின் சரணத்தை ஒரு விதமாகப் பாடும் பொழுது, ஓரிடத்தில் நாடகத்தைப் பார்க்க வந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்யாத காலமில்லை; ஆயினும் அதை இப்படிப் பாவித்துப் பாட வேண்டுமென்று இவருக்குச் சொல்லிக்