பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

நாடக மேடை நினைவுகள்


கொடுத்தது, எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. அன்றியும் ஒரு ராகமாவது இப்படிப் பாட வேண்டுமென்று தெரியாவிட்டாலும், ஏதாவது பாடினால், இந்தச் சந்தர்ப்பத்திற்கு இது தகுதியானதன்று, இது தகுதி, என்று சொல்வதில் இவருக்கு இணையானவர்களை நான் கண்டதில்லையென்றே கூறவேண்டும். சிறு வயது முதல் நல்ல சங்கீதத்தைக் கேட்டுக் கேட்டு, சங்கீதச் செவிச் செல்வம் பெரிதும் உடையார். நான் புத்த சரித்திரத்தை நாடக ரூபமாக ஆட ஒத்திகை நடத்தினபோது, அதிலுள்ள பாட்டுகளையெல்லாம் இவருக்குப் பாடிக் காட்டச் செய்து, இவர் சிலவற்றைத் திருத்திக் கொடுக்கப் பெரும்பயனை அடைந்தேன். ஏதாவது சங்கீதம் தனக்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “இதென்ன, ஜஷ்டை! நன்றாயில்லை. வேறு ஏதாவது பாடச்சொல்” என்று சொல்வார். அவர் கூறுவது சரியாகத்தானிருக்கும். இவருடைய சங்கீதத்தைப் பற்றி, இதையெழுதும் பொழுது ஒரு சிறு விருத்தாந்தம் எனக்கு ஞாபகம் வருகிறது.

ஒருமுறை நானும் இவருமாகத் திருச்சானூருக்கு ஒரு நண்பருடைய குமாரத்தியின் கலியாணத்திற்காகப் போயிருந்தோம். ஒரு நாள் இரவு, சாப்பிட்டுவிட்டு நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, “சம்பந்தம், எனக்கு ராகங்கள் கொஞ்சம் சொல்லிக்கொடு!” என்றார். ஆகட்டும் என்று இசைந்து, அன்று சாயங்காலம் கச்சேரியில் வீணை தனம் வாசித்த சஹானா ராகம், இப்படிப்பட்டதென்று விஸ்தரித்து, என்னாலியன்ற அளவு அதைப் பாடிக் காண்பித்தேன். அதன் முக்கியமான மூர்ச்சையின்னதென்று சொல்லி, அந்த ராகத்தில் எனக்குத் தெரிந்த இரண்டொரு விருத்தங்களையும் பாடிக் காண்பித்தேன்.

பிறகு மறுநாள் நாங்கள் துயில் நீத்து எழுந்தவுடன் கலியாண வீட்டில் நலங்கிற்காகக் குழந்தைகள் பாட, அதை சஹானாராகத்தில் நாதஸ்வரக்காரன் வாசித்தான். உடனே எனது நண்பர், “சம்பந்தம், இதென்ன ராகம்?” என்று கேட்டார்! அதன் பேரில் என்னையுமறியாதபடி எனக்கு அடங்காச் சிரிப்புண்டாக, சிரித்து ஓய்ந்தபின் “இராத்திரி யெல்லாம் ராமாயணம் கேட்டு விட்டு, ராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்பது போல, இரவெல்லாம்