பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

381


அப்பொழுது அவருக்கு அத்யந்த சிநேகிதராயிருந்த என் தகப்பனாரையும் உடன் அழைத்துச் சென்றார்; என் தகப்பனாருடன் என் தமயனார் ப. ஐயாசாமி முதலியாரும் சென்றார். யாத்திரையாக இப்படிப் புறப்பட்டவர்கள், சிப்பந்திகளுட்பட, ஏறக்குறைய நூறு பெயர் இருந்தனர். இவர்களுள் புதுச்சேரியிலிருந்து ஒரு ஸ்வாமியாரும் இருந்தனர். இத்தனை பெயரும் யாத்திரை செய்வதற்காகச் செட்டியார் அவர்கள் ஒரு பெரிய செலூன் (Saloon) வண்டியும் இதர வண்டிகளையும் சேர்த்து ஒரு ஸ்பெஷல் வண்டி (Special Train) ஆக ஏராளமான திரவியம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். யாத்திரை செய்து கொண்டு போகும் பொழுது, காலையில் இஷ்டமான இடத்தில், இந்த ஸ்பெஷல் வண்டி நிறுத்தப்படும். எல்லோரும் இறங்கி ஸ்நானம் எல்லாம் செய்து, பிறகுதான் சமையலுக்கு ஏற்பாடு செய்வார்களாம். சமையலாக நாழிகையாகும். ஆயினும் இந்த ஸ்வாமியாருக்கு மாத்திரம் யாத்திரைக்குச் செட்டியாருடன் சென்ற சில வயோதிகர்களான விதவைகள் ஒரு பெரிய புட்டியில் பிஸ்தாக் கொட்டைகளை நறுக்கிக் கல்கண்டுடன் கலந்து வைத்திருப்பார்களாம். மற்றவர்களெல்லாம் பசியுடன் காத்திருக்க நம்முடைய ஸ்வாமியார் மாத்திரம், காலையில் பல் விளக்கியவுடன் இந்தப் பிஸ்தாக் கொட்டையையும் கல்கண்டையும் சாப்பிட்டுவிட்டு, ஹாய் என்று இருப்பாராம். இரண்டொரு நாள் காலையில் பட்டினியால் கஷ்டப்பட்ட என் தமயனார் பசியாற்றாது மூன்றாவது! தினம், மெல்ல ஸ்வாமியார் அறியாதபடி அவருக்கென்று வைத்திருந்த புட்டியினின்றும் கொஞ்சம் பிஸ்தாக்கொட்டையையும் கல்கண்டையும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டாராம்.

இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் நடைபெற, ஸ்வாமியார் அவர்கள் தினம் தனக்குக் காலையில் சேரவேண்டிய பிஸ்தாக் கொட்டை கல்கண்டு குறைவதைக் கண்டு, என் தகப்பனாரிடம் போய் முறையிட்டனராம். அதன்பேரில், வேடிக்கையான ஒருவிதக் குறும்பு வாய்ந்த என் தகப்பனார், (தற்காலம் எனக்கிருக்கும் சிறு குறும்பு, அவரிடமிருந்து நான் பிதுரார்ச்சிதமாகப் பெற்றேன் என்று நினைக்கிறேன்) என் தமயனை அழைத்து, சிரித்துக் கொண்டே, “ஐயா சாமி, நீதான் இதைச் செய்திருக்க