பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/397

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

நாடக மேடை நினைவுகள்


வேண்டும். இனி முன்பு போல் செய்யாதே! எடுத்தால் சாமியாருக்குத் தெரியும்படியாக அவ்வளவு எடுத்துவிடாதே ஒரே விசையில்! கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடு!” என்று காய்தா செய்தாராம்! இதையெல்லாம் என் தமயனார் எனக்குக் கடித மூலமாகத் தெரிவித்தார். அக்கடிதங்கள், என் பழைய கட்டுகளில் இன்னும் எங்கோ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பிறகு என் தமயனுக்கு நான் நிருபம் எழுதும் பொழுதெல்லாம், “உங்கள் பிஸ்தாக் கொட்டைச் சாமியார் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பேன். இந்த யாத்திரை முடிவு பெறும் வரையில், இதுதான் பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள் எனும் பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு அங்குரார்ப்பணம். இந்த ஸ்வாமியார் மிகவும் ஸ்தூல தேகமுடையவராகவிருந்தாராம். இராதா பிறகு! தினம் காலையில் பிஸ்தாக் கொட்டையும் கல்கண்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால்! ஆயினும் இவர் வாஸ்தவத்தில் ஒரு மஹானாயிருக்கலாம்! இவரைப்பற்றி எனக்கு வேறொன்றும் தெரியாது. என் அனுபவத்தில் ஸ்வாமியார் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பலர்களுக்குள் நூறில் ஒருவர்தான் வாஸ்தவமான சன்னியாசியாக இருப்பார்; மற்றவர்களெல்லாம் வயிறு வளர்க்க வேஷம் போடுபவர்களே. இப்படிப்பட்டவர்கள் பேதைகளை ஏமாற்றி ஜீவித்து வருவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றே, இந்த “பிஸ்தாக் கொட்டைச் சாமியாரை” ஒரு நாடகப் பாத்திரமாக இந்நாடகத்தில் எழுதலானேன்.

இந்தப் பிஸ்தாக் கொட்டைச் சாமியாருடைய இரண்டு சிஷ்யர்கள் வேடம், பாலசுந்தர முதலியாரும் நாராயணசாமிப் பிள்ளையும் பூண்டு, சபையோரைக் களிக்கச் செய்தனர்.

இந்நாடகத்தில் வயோதிகனான தமிழ் உபாத்தியாயர் பாத்திரம் ஒன்று வருகிறது; அதற்கு நான் சென்ன கேசவராய முதலியார் என்று பெயர் வைத்தேன். இப்பெயர் வைத்தபொழுது நான் ஒருவரையும் குறிப்பிட்டுச் செய்தவனன்று. ஆயினும் இதற்குப் பல வருஷம் கழித்து, என் சம்பந்தி முறையை வகித்த பச்சையப்பன் கலாசாலைத் தமிழ் வித்வானாயிருந்த செல்வகேசவராய முதலியார், ஒருநாள் என்னுடன் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்த பொழுது, “என் பெயரை என் அனுமதியின்றி உங்கள் நாடகத்தில்