பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/399

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

நாடக மேடை நினைவுகள்


சாமிநாதனாகவும் நடித்த எனது நண்பர்கள் ராவ்சாஹெப் மாணிக்கவாசகம் பிள்ளை, வைகுண்டம் ஐயர் இருவரையும் நான் நேரிற் கண்டானந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. சங்கீதம் பாடத் தகுந்த அங்கத்தினர் அதிகமாயில்லாத சபைகள் இந்நாடகத்தை எளிதில் ஆடலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த 1910ஆம் வருஷம் எங்கள் சபையார் நடத்திய இன்னொரு முக்கியமான நாடகம் “ஹரிச்சந்திரன்” என்பதாம். இதற்கு முன்பாக அநேக ஹரிச்சந்திர நாடகங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இது மிகவும் புராதானமான நாடகம் என்பதற்குச் சந்தேகமில்லை . நமது தேசத்தில் ஹரிச்சந்திரன் கூத்து ஆடப்படாத கிராமங்களில்லையென்றே கூறலாம். ஒருவிதத்தில் இதற்கு முன் அச்சிடப்பட்ட ஹரிச்சந்திர நாடகங்களுள் பிரபலமானது, “சத்ய பாஷா ஹரிச்சந்திரன்” என்று பெயர் வைத்துப் பெங்களூரில் வசித்த அப்பாவு பிள்ளை இயற்றியதுதான். இவரது புஸ்தகத்தில், பழைய பாட்டுகளையெல்லாம் நீக்கி, புதிய மெட்டுகளுடன் அச்சிட்டிருந்தார். இதுதான் நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன் நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டு வந்தது. இதை ஆடுவதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆக்டர் சுப்பராயச் ‘சாரி என்றொருவர் இருந்தார் என்று நான் முன்பே எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட பழைய கதையை, எனது நண்பர் திவான் பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை அவர்கள் நூதன வழியில் கதையை அமைத்து எழுதினார். சாதாரணமாக இக்கதையை நாடக ரூபமாக எழுதுகிறவர்கள் ஹரிச்சந்திரனை நோக்கி, நட்சத்திரேசன் முதலியோர் ஏதாவது ஒரு பொய் சொல்லிவிடு போதும், என்று சொன்னதாகவே எழுதியிருக்கின்றனர். எனது நண்பர், “பொய்சொல் என்று ஒருவனைக் கேட்டால் பொய் சொல்லிவிடுவானா?” இது அவ்வளவு ஒழுங்காகவில்லை. ஹரிச்சந்திரன், தானாகப் பொய்புகலும்படியான பல கஷ்டங்களுக்குட்படுத்தி, அவைகள் ஒன்றினாலும் அவன் மனங்கலங்காது, சத்தியத்தையே பேசி வந்ததாகக் கதையை ஏற்படுத்தி மிகவும் சாதுர்யமாக எழுதியிருக்கிறார்.

இந்த அழகிய நூதன அமைப்பை , அவர் எழுதிய புஸ்தகத்தை வாசித்தால்தான் தெரியும். ஆயினும் தமிழ்க்