பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

385


கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று, தமிழுக்கே பல வருடங்கள் உழைத்து வந்த இந் நண்பர் இயற்றிய இந்த ஹரிச்சந்திர நாகடத்தில் என் மனத்திற்கு ஒரு குறை தோன்றுகிறது. அதாவது இந்நாடகம் மிகவும் பெரியதாயிருக்கின்ற தென்பதே. இவர் முதலில் இந்நாடகத்தை வெளியிடு முன் ப்ரூப் காபி (Proof Copy) எனக்குக் காட்டியபடி ஏறக்குறைய எழுநூறு அச்சிட்ட பக்கங்கள் அடங்கியதாயிருந்தது! எனது நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, ஆசிரியரிடம் இது மிகவும் நீளமாயிருக்கிறது, இதைக் குறுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இதற்கு உதாரணமாக, சந்திரமதியை, காசிராஜன் தன் மகவைக் கொன்றதாக விசாரணை செய்த காட்சி மாத்திரம், அச்சிட்ட 60 பக்கங் களுக்கு மேலிருந்தது! தற்காலத்திய செஷன்ஸ் கோர்ட்டு விசாரணை மாதிரி தற்சாட்சி விமரிசை, எதிர் விமரிசை, மறு விமரிசை முதலியவைகளுடன் எழுதியிருந்தது! இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், எங்கள் வேண்டுகோளுக்குக்கிசைந்து பிள்ளை அவர்கள் நாடகத்தை ஏறக்குறைய முன்னூற்று முப்பது பக்கங்களாகக் குறுக்கினார். இதை எங்கள் சபை ஆடின போது, இதில் மூன்றிலொரு பாகமாகக் குறுக்கி ஆடினோம். அப்படிக் குறுக்கியும், ஏறக்குறைய நான்கரை, ஐந்து மணி நேரம் பிடித்தது!

பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டு எழுதிய இந் நாடகத்தை ஆசிரியர் அச்சிட்டு வெளியாக்கியவுடன், எங்கள் சபையார் இதை ஆடவேண்டுமென்று தீர்மானித்தனர். ஆயினும் முதலில் எடுக்கும் பொழுதே ஒரு கஷ்டம் வந்தது. தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசன் என்பவர், எங்கள் சபையை விட்டகன்று நெல்லூர் போய்ச் சேர்ந்து விட்டார். தமிழில் அக்காலம் ஹரிச்சந்திரன் வேடம் பூணத் தகுந்தவர்கள் ஒருவருமில்லாதிருந்தது; என்னால் ஹரிச்சந்திரன் வேடம் பூண முடியாது என்று கூறிவிட்டேன். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களுண்டு. முதலாவது ஹரிச்சந்திரன் வேடம் பூணத்தக்க திடமான காத்திரம் எனக்கில்லை. இரண்டாவது, எனக்கு அரிச்சந்திரன் பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடும்படியான சங்கீத ஞானமில்லை. இவ்வாறு ஹரிச்சந்திரனாயாட எனக்குச்