பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

நாடக மேடை நினைவுகள்


அவ்வளவு நல்லதல்ல. அன்றியும் அப்படி ஆக்டர்களல்லா தாரை ஒத்திகைகளைப் பார்க்க விடுவதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறது. சில ஆக்டர்கள் கூச்சமுடையவர்களாயிருப்பார்கள்; தாங்கள் அறியாதவர்கள் எதிரில் ஒத்திகை நடத்த நாணப்படுவார்கள்; அன்றியும், அவர்கள் ஏதாவது தவறாக நடித்தால், அந்நியர்கள் எதிரில், கண்டக்டர்கள் அவர்களது தப்பை எடுத்துக்காட்ட மனம் ஒப்பார்கள்; மேலும் ஒத்திகைகளில் ஏதாவது தவறு நடந்தால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆக்டர்கள் அல்லாதார், நாடக தினம் வெளியில் உட்கார்ந்து அந்த இடம் வரும் பொழுது, இந்த இடத்தில் இப்படித் தப்பு நடக்கப் போகிறதென்று, அவ்விடம் வருமுன்னமே பேச ஆரம்பிக்கின்றனர். இவைகளையெல்லாம் கருதுமிடத்து, ஆக்டர்களைத் தவிர மற்வர்களை ஒத்திகைகளைப் பார்க்க விடுவது உசிதம் அல்லவென்று எனக்குத் தோன்றுகிறது. இது பற்றியே சில காலம் கழித்து, கண்டக்டர்கள் ஒத்திகை நடத்தும் பொழுது, ஒத்திகை அறையினின்றும் அந்நியரை வெளிப்படுத்தலாம் என்று ஒரு சட்டம் ஏற்படுத்தினேன் எங்கள் சபையில். இதை இதர நாடக சபைகளும் கவனிக்குமாறே இதைப் பற்றி இங்கு விரிவாய் எழுதலானேன்.

இந்த ஹரிச்சந்திரன் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையார் நடத்தியபொழுது, ஹாலில் இடமில்லாமல் டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தும்படி நேரிட்டது. ஆகவே, இதைச் சீக்கிரத்தில் மறுபடியும் இன்னொரு முறை இவ்வருஷமே ஆடினோம். இரண்டு முறையும் நல்ல தொகை வசூலாயிற்று. நான் ஹரிச்சந்திரனாக நடித்தது நன்றாயிருந்ததென என் முன் எல்லோரும் கூறிய போதிலும், அவர்கள் மனத்தில் நான் பாடவில்லை என்னும் குற்றம் இருந்தது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை . எனதாருயிர் நண்பர், சி.ரங்கவடிவேலு பற்றி, மிகவும் நன்றாய்ப் பாடி நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். ஆயினும் இப்பாத்திரத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரைப் போல் அவ்வளவு நன்றாய் நடிக்கவில்லை என்பது என் துணிபு. ஆயினும் ரங்கவடி வேலு சந்திரமதியாக நடித்ததில், ஹரிச்சந்திரனை விட்டுப் பிரியும் கட்டத்திலும் காலகண்டர் வீட்டில் பணிவிடை செய்யும் கட்டத்திலும் மிகவும் நன்றாய் நடித்தார் என்பது