பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

391


ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனும் சந்திரமதியுமாக நடிக்க, நான், அவர்கள் காட்டில் கஷ்டப்படும்பொழுது, அவர்களைப் பயமுறுத்தும் பூதமாக நடித்தேன்; பூதத்திற்கேற்றபடி முகத்தை விகாரமாகச் செய்து கொண்டு, கறுப்பு ஆடை அணிந் தேன்; நான் பேசவேண்டியதெல்லாம், “பூ!” என்னும் ஒரு கூச்சலே! இதை நான் இங்கெடுத்து எழுதவேண்டிய காரணம், நாடகமாடுவதென்றால் ஒரு சபையின் அங்கத்தினன் எந்த வேஷமும் தரிக்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறிய வேண்டியே; நாம் அயன் ராஜபார்ட் ஆக்டராயிற்றே, ஆகவே வேறு சின்ன வேஷங்கள் தரிக்கலாகாது என்று எண்ணலாகாது; அன்றியும் இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தோமே, ஆகவே அதே நாடகத்தில் ஓர் அற்ப வேஷம் தரிக்கலாமா என்று யோசிக்கலாகாது. எந்த வேஷத்தை எடுத்துக் கொள்ளும்படி நேர்ந்த போதிலும் அதற்குத் தக்கபடி நடித்தல்தான் ஆக்டருக்குரிய நற்குணம் அதுவும் முக்கியமாக இதை ஜீவனோபாயமாகக் கொள்ளாது வினோதமாக கொள்ளும் ஆமெடூர் (Amateur) ஆக்டர்களுக்கு.

இந்த வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தமிழ் தெலுங்கு நாடகங்களுடன், ஒரு மலையாள நாடகமும் ஒரு சிறு ஹிந்துஸ்தானி நாடகமும் ஆடினோம். இச்சமயம் மலையாளி அங்கத்தினர் பலர் இருந்தபடியால், அவர்களையெல்லாம் சேர்த்து ‘கல்யாணிக் குட்டி’ என்னும் மலையாள நாடகத்திலிருந்து சில காட்சிகள் ஆடினோம். அதில் நான் “கேலு” எனும் நாயர் வேலைக்காரன் வேஷம் பூண்டேன். சில மஹம்மதிய மெம்பர்கள் இருந்தபடியால், ஷேக்ஸ்பியர் எழுதிய “நடுவேனிற் கனவு” (Mid summer Nights’ Dream) என்னும் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்து, அதை ஆடினோம். அதிலும் எனக்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்துஸ்தானி பாஷை பேச நான் கற்றுக்கொண்டபடியால், இதில் ஆடுவது எனக்கு எளிதாயிருந்தது. பெரிய நாடகங்களில் முக்கியமான கதாநாயகன் பாகத்தை ஆடுவதில் எவ்வளவு சந்தோஷமாயிருந்ததோ, அவ்வளவு சந்தோஷ மிருந்தது, வேறு பாஷைகளில் இப்படிப்பட்ட சிறிய பாகங்