பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

நாடக மேடை நினைவுகள்


நாங்கள் எடுத்துக் கொண்டு போன சாமான்கள், ஒரு வாகன் நிறைய இருந்ததென்றால், அவைகளை யெல்லாம் கட்டி ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் கொண்டு போய்க் கொண்டு வர எவ்வளவு கஷ்டமாயிருக்க வேண்டுமென்று இதைப் படிக்கும் நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அன்றியும் சபையின் அங்கத்தினர் ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் குறைந்த சார்ஜில் (அரை சார்ஜில்) போய்வர மேல் அதிகாரிகளுக்கு எழுதி உத்தரவு பெற வேண்டியிருந்தது; இதிலெல்லாம் எனது நண்பர் பி.எஸ். தாமோதர முதலியார் மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு உதவினார். இவ்விஷயத்தில் இந்தப் பிரயாணத்திலும், பிறகு சபை போன அநேகம் பிரயாணங்களிலும் இவர் சபைக்காக எடுத்துக் கொண்ட சிரமமானது என்றும் மறக்கற்பாலதன்று. தற்காலம் உலக இன்பத்தைத் துறந்து சன்னியாசியாக வசித்து வரும் இவருக்கு என்றும் எங்கள் சபை நன்றியறிதலுடையதாயிருக்க வேண்டும். இவ்வேற்பாடுகள் எல்லாம் செய்த பொழுது இரவென்றும் பகலென்றும் பாராமலும் நித்திரையென்றும் பசியென்றும் பாராமலும் இவர் உழைத்தது ஈசனுக்குத்தான் நன்றாய்த் தெரியும்; எனக்குக் கொஞ்சம் தெரியும். இது ஒரு கஷ்டமா என்று கூறுவார்கள் சிலர்; இம்மாதிரியாக, ஒரு நாடக சபையை ஓர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டிய ஏற்பாடுகள் செய்து பார்த்தால் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியும்.

இவைகளையெல்லாம் ஏற்பாடு செய்த பிறகு, முன்னதாகக் கொழும்புக்குப் போய், அங்கு நாங்கள் தங்கியிருப் பதற்கு வேண்டிய வசதி முதலியவற்றைப் பேசி வைப்பதற்கும், நாடக விளம்பரங்கள் முதலியவற்றைப் பிரசுரம் செய்வதற்கும் யாரையாவது உடனே அனுப்ப வேண்டுமென்று, எனது கொழும்பு நண்பர் எழுதினார். அதன்பேரில் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவையும், யாழ்ப் பாணத்தில் பிறந்தவராகிய ஜெ.பி. ஷண்முகம் பிள்ளையையும், முன்னதாக அனுப்பி வைத்தேன். இவர்களிருவரும் முன்னதாகப் போய்ச் சேர்ந்து எங்களுக்கு இருப்பிடம் முதலியன வெல்லாம் ஏற்பாடு செய்து வைத்தனர். எனதுயிர் நண்பர் தினம் எனக்கு அங்கிருந்து காகிதம் எழுதிக்கொண்டிருந்தார். அக்காகிதங்களில் நமது நாடகங்களுக்கு வசூலாவது