பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/416

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

401


நமது செலவுக்குக் கட்டிவருமோ என்னமோ எனக்கு சந்தேகமாயிருக்கிறதெனப் பன்முறை தெரிவித்தனர். சென்னையிலிருந்த எனது நண்பர்களும், இப்பெரிய பிரயாணத்தை எடுத்துக்கொண்டோமே, சபைக்கு இதனால் பெரும் நஷ்டம் வந்தால் என்ன செய்கிறதென மிகவும் பயந்தனர். வாஸ்தவத்தில் எனக்கும் பயமாகத்தானிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், நாங்கள் புறப்படுவதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன், ஒரு நாள் எனக்கு ஒரு தந்தி வந்தது. ‘ஐந்து நாடகங்களுக்கு 2500 ரூபாய்க்கு ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக் கொள்வதாகச் சொல்லுகிறார். அதை ஒப்புக் கொள்ளவா?’ என்று; நான் மிகவும் சந்தோஷப்பட்டவனாகி, எமது நிர்வாக சபை அங்கத்தினர்க்கு அதைக் காண்பித்துக் கேட்க, எல்லோரும் மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டனர். நாங்கள் வரவு செலவுக் கணக்குப் பார்த்ததில், நாடகம் ஒன்றிற்கு 500 ரூபாய் வந்தால், நஷ்டமின்றிச் சரியாகப் போகும் என்று கணக்கிட்டிருந்தோம். ஆகவே மேற்கண்டபடி ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக்கொண்டால் நமக்கு நஷ்டமேயிராது என்று குதூஹலத்துடன் சம்மதித் தோம். அதன்படியே இங்கிருந்து தந்தி கொடுத்து அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டோம். நஷ்டம் வருமே என்கிற பயம் இதனால் அடியுடன் தீர்ந்தபோதிலும், மற்ற ஏற்பாடுகளெல்லாம் இரவு பகலாகச் செய்ய வேண்டியிருந்தது. அச்சமயம் எனது பால்ய நண்பர் வி.வி.. ஸ்ரீனிவாச ஐயங்கார் கோடைக்கானலுக்குத் தேக சௌக்கியத்திற்காகப் போயிருந்தார். அவருக்கு “நீ உடனே திரும்பிப் பட்டணம் வந்து சேராவிட்டால், எனக்குப் பைத்தியம் பிடித்துப்போம்!” என்று தந்தி கொடுத்து அவரை நான் வரவழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.

பிறகு எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு ஒரு புதன் கிழமை இங்கிருந்து புறப்பட்டோம். யாரோ, வியாழக்கிமை வார சூலை, ஆகவே வியாழக்கிழமை புறப்படக்கூடாதென்று சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லா விட்டாலும், யாராவது இது நல்லதல்ல வென்று ஏதாவது சொன்னால் அவர்கள் மனம் கோணாதபடி அவர்களிஷ்டப்படியே நடப்பது என் வழக்கம். சென்னையிலிருந்து தூத்துக்குடி போய்ச் சேர 24 மணி நேரம் பிடித்தது. ரெயில் பிரயாணத்தில் ஒரு