பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

நாடக மேடை நினைவுகள்


கஷ்டமுமில்லை; ஆங்காங்கு சிநேகிதர்களுக்கு முன்னதாக எழுதி, உணவு முதலியவற்றை யெல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். தூத்துக்குடியிலிருந்து கப்பல் யாத்திரையில்தான் மிகவும் கஷ்டப்பட்டோம். என்னுடன் வந்த சுமார் 40 பெயர்களில் ஒருவராவது இதற்கு முன் சமுத்திரத்தின் மீது பிரயாணம் செய்ததில்லை. போதாக்குறைக்குத் தூத்துக்குடி ஆர்பரிலிருந்து, எங்களை ஏற்றிக் கொண்டு போக வேண்டிய கப்பலானது ஒரு மைலுக்கு அப்பால் தங்கியிருந்தது; அதைப் போய்ச் சேர ஸ்டீம்லான்ச்சில் போகவேண்டியிருந்தது; இதில் நாங்கள் இத்தனை பெயரும் எங்கள் சாமான்களுடன் ஏறிப் புறப்பட்டவுடன், அலைகள் மோத ஆரம்பிக்க, இந்த லான்ச்சானது மேலும் கீழுமாக ஆடத் தலைப்பட்டது. பயங்காளிகளாகயிருந்த சில அங்கத்தினரும், எங்களுடன் வந்த சில வேலைக்காரர்களும் அழத் தொடங்கினார்கள்! அவர்களுக்கெல்லாம் தைரியம் சொன்ன போதிலும் எனக்கும் பயமாகத்தானிருந்தது. அப்பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். நான் கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டிருக்க, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நண்பர், நான் கண் விழித்தவுடன், ‘ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்க, “இத்தனை பேரும் என்னை நம்பி இப் பிராயணத்திற்கு உடன்பட்டிருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் இப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு, பத்திரமாய் அவரவர்கள் வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும்படியாக, ஸ்வாமியைக் குறித்துப் பிரார்த்திக்கிறேன்” என்று உண்மையை உரைத்தேன்.

ஸ்டீம் லான்ச்சிலிருந்து கப்பலைப் போய்ச் சேர்ந்த வுடன், இந்தக் கஷ்டம் ஒழிந்தது என்று எல்லோரும் சந் தோஷித்தார்கள். ஆயினும் இனி வரப்போகிறதை அறிந்தவனாய், எல்லோரையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரித்து விட்டு, என் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டேன். இதைக் கண்டு என்னைப் பயங்காளி என்று ஏளனம் செய்துவிட்டு, எல்லோரும் கப்பலின் மேல் பாரிசத்திலிருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் ஒரு கஷ்டமுமில்லாவிட்டாலும், கப்பல் வேகமாய்ப் போக ஆரம்பித்தவுடன் கப்பல் மேலும்