பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/421

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

நாடக மேடை நினைவுகள்


றோம் என்று புகழ ஆரம்பித்தார்கள். அவர்களுள் ஒருவர் கூறிய வார்த்தைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்; சதாசிவம் என்பவர், “சில வருஷங்களுக்குமுன், நாராயண சாமிப் பிள்ளை, (இவர் சுப்பராயாச்சாரி கம்பெனி உடைந்து போன பிறகு, பிரத்யேகமாக ஒரு கம்பெனி ஏற்படுத்திப் பல நாடகங்களை நடத்திக் கீர்த்தியும் பணமும் சம்பாதித்தவர். இவர் இலங்கைத் தீவில் பல நாடகங்கள் நடத்தி ஏராளமான பொருள் சம்பாதித்தவர்) உங்கள் சபையைப் பற்றிச் ‘சுகுண விலாச சபையார் ஏறிய நாடக மேடையின்பேரில் நாங்கள் ஏற ஏலாது!’ என்று புகழ்ந்திருக்கிறார்!” என்றார். இது போன்ற பல வார்த்தைகளைக் கேட்டபொழுது, ‘என்னடா இது’ இவர்கள் எல்லாம் நம்மைப்பற்றி மிகவும் அதிகமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! அவர்கள் எண்ணுவதற்குக் குறையாதபடி அவர்கள் மனத்தைத் திருப்தி செய்விக்க வேண்டுமே! என்னும் பீதி என்னைப் பற்றிக்கொண்டது.

மறு நாள் காலை நாடகசாலைக்கு, படுதாக்களெல்லாம் சரியாகக் கட்டியிருக்கின்றதா என்று, என் வழக்கம் போல் பார்க்கப் போனபோது, சைட் படுதாக்களும் மேல் ஜாலர்களும் கட்டச் சௌகர்யமில்லாதிருக்கிறதென்று, எங்கள் ஆள் சொன்னான். அதன் பேரில் என்ன செய்வது என்று கலங்கியவனாய், எனக்குத் தோன்றிய இரண்டொரு யுக்திகளைச் சொல்லிவிட்டு, அந்த ஆளிடம் உன்னாலானதைப் பார் என்று சொல்லிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தேன். சாதாரணமாகவே, வேறு ஊருக்குப் போய் முதல் முதல் ஏதாவது நாடகமாடுவதென்றால், எனக்கு, எப்படி முடியுமோ என்கிற பயமுண்டு. இதனுடன் மேற்சொன்ன காரணங்களும் ஒன்றாய்க் கூடவே, என் பாடு கஷ்டமாகி விட்டது. இம்மனக் குழப்பத்தில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு யார் வந்து என்னுடன் பேச வந்தாலும்"சிடு சிடு” என்று பேச ஆரம்பித்தேன்; இம்மாதிரியாக எனக்கிருக்கும் சமயங்களிலெல்லாம், எனதுயிர் நண்பர், “இப்பொழுது வாத்தியாரிடம் ஒருவரும் கிட்டப் போகாதீர்கள். அவருக்குப் பிசாசு பிடித்திருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்லுவார். கொஞ்ச நேரம் பொறுத்து, இதற்கெல்லாம் நாம் கவலைப்படுவானேன்? ஸ்வாமியிருக் கிறார் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்திவிட்டு, எழுந்