பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

409


நண்பர், “அவர்தான் சம்பந்தம்! உங்களுக்குத் தெரியாதா?” என்று பதில் உரைத்தனராம். இதை அந்த சதாசிவம் என்பவரே என்னிடம் மறுநாள் தெரிவித்தார். “அந்தச் சிறுவருக்கு, வயது 38 ஆகிறது என்றும் கூறியிருக்கக் கூடாதா?” என்று சொல்லி நான் சிரித்தேன்.

மேற்சொன்னபடி ஏராளமான ஜனங்கள் வந்திருக்கிறார்களே என்கிற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, இதில் மாத்திரம் என்ன பிரயோஜனம். இவர்களெல்லாம் திருப்திகரமாயிருக்கிறதெனச் சந்தோஷப் பட்டாலொழிய என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், முதற் காட்சி ஆரம்பிக்கும் பொழுது, முதல் சைட் படுதா பின்னால் நின்றுகொண்டு சபையோரைப் பார்க்கா விட்டாலும், அவர்கள் நாடகத்தை எப்படி அங்கீகரிக்கிறார்கள் என்று மிகவும் கவனித்து வந்தேன். முதல் காட்சியின் ஆரம்பத்தில், மேடை மீது பத்மநாபராவ், ஸ்ரீனிவாசராகவாச்சாரி, ரங்கவடிவேலு, வடிவேலு, ராமகிருஷ்ணையர் ஆகிய இந்த ஐவரும் ஸ்திரீ வேஷத்தில் தோன்றுகின்றனர். அக்காலத்தில் இவ்வைந்து பெயரும் நல்ல யௌவனத்தில் இருந்தவர்கள். ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர்கள்; முக்கியமாக வெங்கடாசல ஐயர் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு இவர்களுக்கெல்லாம் மிகவும் அழகாக வேஷம் போட்டிருந்தார். விநாயகர் ஸ்துதி, சரஸ்வதி துதி முடிந்து, டிராப் படுதா மேலே போனவுடன் இவ் வுருவங்களைக் கண்டதும், வந்திருந்த சபையோர் சந்தோஷப்பட்டனர் என்பதை, அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலுடன் பேசிக்கொண்ட சப்தத்தினால் கண்டறிந்தேன். அன்றியும் இன்னின்ன நாடகத்தில் இன்னின்ன சந்தர்ப்பத்தில் சபையோர்கள் சந்தோஷப்படவேண்டும் என்று எனக்கு ஒரு நியதியுண்டு. அவ்வண்ணமே, அம் முதற் காட்சியில் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் சபையோர் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தது, எனக்கு சந்தோஷமுண்டாக்கியது. எனக்கு ஏதோ மிகுதியாயிருந்த கொஞ்சம் சந்தேகமும், முதற் காட்சியின் முடிவில், டிராப் படுதா இறங்கின பொழுது, வந்திருந்தவர்கள் அனைவரும் செய்த கரகோஷத்தினால், முற்றிலும் நிவர்த்தியாயது. மறுநாள் சர். ராமநாதனுடைய மூத்த குமாரர் ராஜேந்திராவுடன் நான் பேசிக்கொண்டிருந்த